மகாராஷ்டிரா அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல ஆயிரம் ஆண்டு பழமையான சிவலிங்கமா ?

பரவிய செய்தி

மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியின் போது பல ஆயிரம் ஆண்டு பழமையான சிவாலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திரபூர் மாவட்டத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது பல ஆயிரம் ஆண்டு பழமையான சிவலிங்கம் ஒன்று கிடைத்துள்ளதாக தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக வலைதளப் பிரிவு தலைவர் சி.டி.நிர்மல் குமார் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

Advertisement

அந்த பதிவு தற்போது முகநூல் உள்ளிட்ட பிற சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கொள்ளத் தீர்மானித்தோம்.

உண்மை என்ன ?

சிவலிங்கம் கிடைத்த புகைப்படத்தை பார்க்கையில், ” அது கோவில் பகுதி போன்றும், பின்னால் புத்தர் உள்ளிட்ட சில சாமி சிலைகளும் உள்ளன. அங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறவில்லை. கோவில் பகுதியில் பள்ளம் தோண்டியது போன்று சில அடிகளிலேயே சிவலிங்கம் தென்பட்டு இருக்கிறது ” எனத் தெளிவாய் தெரிகிறது.

சிவலிங்கம் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் பழமையான சிவலிங்கம் கிடைத்ததாக 2021 ஜூன் மாதம் சமூக வலைதள பதிவுகள் மற்றும் சில செய்திகள் கிடைத்தன.

Advertisement

Facebook link

மே 27-ம் தேதி TheSquint எனும் முகநூல் பக்கத்தில், சந்திரபூர் மாவட்டத்தின் சாவோலி தாலுகா அருகே வைன் கங்காஆற்றின் வடக்கு கடற்கரை பகுதியில் ஒரு கோவில் கட்டும் போது 5 அடி நீள சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது ” எனக் கூறப்பட்டுள்ளது.  

2021 ஜூன் 1-ம் தேதி thehitavada எனும் இணையதள செய்தியில், ” சந்திரபூரில் இருந்து விதர்பாவை ஆண்ட பரமார் ஆட்சியின் போது இந்த சிவலிங்கம் கட்டப்பட்டதாக வரலாற்று ஆசிரியரான அசோக் சிங் தாக்கூர் கூறியுள்ளார். இந்த சிவலிங்கம் 11 முதல் 12-ம் நூற்றாண்டை சார்ந்தது ” என இடம்பெற்று இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் பழமையான சிவலிங்கம் கிடைத்தது உண்மையே. ஆனால், அகழ்வாராய்ச்சியின் போது கிடைக்கவில்லை, கோவில் கட்டுமானப் பணியின் போதே 5 அடி நீள சிவலிங்கம் கிடைத்துள்ளது. அது பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது அல்ல. பரமார் ஆட்சியில் கி.பி 11 முதல் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button