மகாராஸ்டிரா நீதிமன்றத்தில் பெண் நீதிபதியும், வழக்கறிஞரும் சண்டையிடும் வீடியோவா ?

பரவிய செய்தி
இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதியும்,பெண் வக்கீலும் கட்டிப்புரண்டு குடுமிபிடி சண்டை
மதிப்பீடு
விளக்கம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தின் வளாகத்தில் பெண் நீதிபதியும், பெண் வழக்கறிஞரும் சண்டையிடுவதாகவும், இந்திய வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்த நிகழ்வு எனக் கூறியும் 1 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
*இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதியும், பெண் வக்கீலும் கட்டிப்புரண்டு குடுமிபிடி சண்டை காட்சிகள் வைரல்* pic.twitter.com/V2rRYSLFk2
— தேசியம் பேசும் தமிழன் (@bharanipaints) February 28, 2023
*இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதியும், பெண் வக்கீலும் கட்டிப்புரண்டு குடுமிபிடி சண்டை காட்சிகள் வைரல்* FIRST TIME IN INDIA A LADY JUDGE AND LADY ADVOCATE OPENLY HAD A FIST FIGHT THAT TOO IN A COURT IN MAHARASHTRA, SEPARATED BY A LADY POLICE OFFICER. 😅🤣 pic.twitter.com/K34joYOYUf
— HINDUSTHANI (@RudramurthiMur4) March 1, 2023
உண்மை என்ன ?
நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரின் சண்டை குறித்து தேடுகையில், ” 2022 அக்டோபர் 29ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்தில் வைரல் செய்யப்படும் வீடியோ தொடர்பான செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால், அந்த வீடியோவில் சண்டையிடும் இரண்டு பேருமே வழக்கறிஞர் என்றேக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
செய்தியில், ” உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஸ்காஞ் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாறி மாறி அடித்துக் கொண்டு உள்ளனர். இது தொடர்பாக அலிகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் மீது காஸ்காஞ் பெண் வழக்கறிஞர் புகார் கொடுத்து உள்ளதாகக் ” கூறப்பட்டு உள்ளது.
டைனிக் பாஸ்கர் எனும் இந்தி செய்தி தளத்தில், ” குடும்ப நல வழக்கு தொடர்பாக காஸ்காஞ் மாவட்ட நீதிமன்றத்தில் வாதாட வந்த அலிகார் வழக்கறிஞர் சுனிதா கௌசிக் மற்றும் காஸ்காஞ் வழக்கறிஞர் கவிதா சக்சேனா இடையே உருவான வார்த்தை மோதலால் சண்டை ஏற்பட்டதாக ” குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க : சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தல்வீர் பண்டாரி தேர்வு – மோடியின் ராஜதந்திரம் எனப் பரப்பப்படும் பொய் செய்தி !
முடிவு :
நம் தேடலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் நீதிபதியும், பெண் வழக்கறிஞரும் சண்டையிடுவதாகப் பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோவில் இருப்பது நீதிபதி அல்ல, இரண்டு பேரும் வழக்கறிஞர்கள் தான். இந்த சம்பவம் நிகழ்ந்தது மகாராஷ்டிரா அல்ல, உத்தரப்பிரதேசம் என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.