This article is from Aug 05, 2018

மோடி ஆட்சியில் அஸ்ஸாம் nh 54 நெடுஞ்சாலை பணிகள் முடிக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

மைபங் முதல் லும்டிங் வரையிலான சாலைகளை நீடிக்கும் NH 54 பணிகள் மோடி அரசால் 48 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. 48 வருட காங்கிரஸ் ஆட்சியில் இந்திய சாலைகளில் நிகழ்த்த முடியாத மாற்றத்தை மோடி அரசு 48 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

அஸ்ஸாம் NH 54 நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் மோடி அரசுக்கு முன்பாகவே துவங்கியுள்ளது. மேலும், இந்த திட்டப் பணிகளின் தொடர்ச்சியே மோடி ஆட்சியில் நிகழ்ந்து வருகிறது.

விளக்கம்

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மைபங் முதல் லும்டிங் வரையிலான தேசிய நெடுஞ்சாலை NH 54-ல் சாலைகளை மேம்படுத்தி அமைக்கும் திட்டத்தை தொடங்கி விரைவாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் ஆட்சியில் 48 மாதங்களில்   மைபங் முதல் லும்பிங் NH 54-ல் மலை வளைவில் அமைக்கப்பட்ட சாலைகள். 48 வருட காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்த்த முடியாததை மோடி அரசாங்கம் நிகழ்த்தி காட்டியுள்ளது. இந்த செய்தி இந்திய அளவில் பகிரப்படும் மிக முக்கியமான செய்தி ஆகும்.

2014-ம் ஆண்டு டிசம்பரில் ராஜ்யசபாவில் பேசிய மாநில சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்திய அரசு மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கி நாட்டில் பல பகுதிகளில் உள்ள 54,478 கி.மீ தொலைவிலான தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதில் 22,345கி.மீ பணிகள் முடிந்துள்ளன மற்றும் 12,625 கி.மீ தொலைவிற்கான பல்வேறு கட்டப் பணிகள் அக்டோபர் 2014-ல் இருந்து நடைபெற்று வருகிறது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

அஸ்ஸாமில் மைபங் முதல் லும்டிங் NH 54-ல் உள்ள AS-25 ( 83.4KM TO 111KM ), AS-26 (60.5KM TO 83.4KM ), AS-24 (111KM to 126.4 ) மற்றும் AS-27 ( 40km to 60.5km ) உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் 2003 முதல் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தும் பணிகள் அனைத்தும் இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையின் கீழ் நடைபெற்றது. NH 54-ல் நடைபெற்ற அனைத்து பணிகளும் 2017-ல் முடிவடையும் என தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும், இந்த இத்திட்டம் சார்ந்த சில பகுதிகள் தற்போது வரை நடைபெற்று வருகிறது.

நிதி அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட அஸ்ஸாம் 191 திட்டங்கள் பற்றிய அறிக்கையில், “ அரசு உள்கட்டமைப்பு திட்டத்தில் கட்டுமான துவக்க நிலை அல்லது பராமரிப்பு பணி நிலைக்கு 2011-ல் அரசு 5 கோடி செலவிட்டுள்ளது. அடுத்து 2012 ஆம் ஆண்டு ஏப்ரலில் 50  கோடியும், ஏப்ரல் 2012-ல் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட திட்டங்களின் துவக்க கட்டுமான நிலைக்கு 50 கோடியும் தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவித்து அதனுடன் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற 191  திட்டங்களின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலை பணிகள் பல கி.மீ தொலைவிற்கான பணிகள் 2014-ம் ஆண்டிற்கு முன்பாகவே முடிவடைந்துள்ளன. பிரதமர் மோடி அரசாங்கம் பதவியேற்ற பிறகு மீதமுள்ள பணிகள் நடைபெற்றன. ஆனால், மைபங் முதல் லும்டிங் NH 54-ல் நெடுஞ்சாலை நீடிக்கும் பணிகள் பிரதமர் மோடி அரசில் நடைபெற்று வந்தாலும் அதனை தீர்மானித்து துவங்கியது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான். NH 54 MAIBANG-LUMDING சாலை பணிகள் இந்த ஆட்சியில் தொடங்கவும் இல்லை முடிவு பெறவும் இல்லை. நெடுஞ்சாலை மேம்படுத்தும் திட்டம் தனி ஒரு கட்சியின் சாதனையும் அல்ல.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader