மோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல !

பரவிய செய்தி

மோடி ஜி அரசின் மேக் இன் இந்தியா.. வெற்றி நடைபோடுகிறது..

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கியது என கீழ்காணும் வீடியோ முகநூல், ஹலோ அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Advertisement

Facebook link | archive link

வீடியோவில், நீருக்குள் இறங்கும் ராணுவ வாகனங்கள் படகுகளாக மாறுகின்றன, பின்னர் அவை அனைத்தையும் ஒன்றிணைந்து பாலத்தை உருவாக்குகின்றனர். அதில் ராணுவ வாகனங்கள், பீரங்கிகள் உள்ளிட்டவை பயணிப்பதை பார்க்க முடிந்தது. இதற்கு ஹிந்தி பாடல் ஒன்றையும் பின்னணியில் இணைத்து உள்ளனர்.

இந்த வீடியோவில் இருப்பது உண்மையில் இந்தியா ராணுவத்தில் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட வாகனங்களாக என அறியாமலேயே ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

Advertisement

வீடியோவில் இடம்பெற்ற ராணுவ பீரங்கியில் பயணிக்கும் வீரர்களை பார்க்கையில் இந்திய வீரர்களை போன்றோ, இந்திய ராணுவ உடையை போன்றோ இல்லை. வீடியோ குறித்து தெரிந்து கொள்ள ” army build bridge river ” எனும் கீ வார்த்தைகளை கொண்டு தேடிய பொழுது வைரல் செய்யப்படும் வீடியோ Aiirsource Military எனும் யூடியூப் சேனலில் கிடைத்தது. வைரல் வீடியோவிலும் cre : Aiirsource Military எனக் கீழே இடம்பெற்று இருப்பதை பார்க்கலாம்.

2017-ல் ஜூன் 20-ல் பதிவான வீடியோ உடன் அளிக்கப்பட்ட தகவலில், லித்துவேனியா நாட்டின் ருக்லாவில் போலந்து மற்றும் லித்துவேனியா நாட்டின் ராணுவத்தினர் பாலம் அமைத்து நீரை கடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நேட்டோ பயிற்சியின் பொது ஆற்றின் குறுக்கே ராணுவ படையினர் பாலத்தை உருவாக்குகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.

2019-ல் ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ராணுவனத்தினர் இணைந்து M3 Amphibious Rig வாகனத்தை கொண்டு ஆற்றில் பாலத்தை உருவாக்கியதை பார்க்கலாம். M3 Amphibious Rig ராணுவ வாகனத்தை டங் ஆகவும், நீரில் பாலம் அமைக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

இந்திய ராணுவனத்தினர் செய்யும் பல சாதனைகளை வெளிப்படுத்தாமல் பிற நாட்டினரின் வீடியோக்கள், புகைப்படங்களை இந்திய அரசின் சாதனை, இந்திய ராணுவனத்தினர் என வதந்திகளை பரப்பி வருகிறார்கள். M3 Amphibious Rig வாகனம் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்டதா என தேடுகையில் அது தொடர்பான எந்த தகவலும் இல்லை. இது மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது அல்ல என அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும் படிக்க : மேக் இன் இந்தியாவில் உருவான ரயில்கள் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியா ?

இதற்கு முன்பாகவும், மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட ரயில்கள் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், கால்வாய் பணிக்காக உருவாக்கப்பட்ட இயந்திரம் என வதந்திகளை பரப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : கால்வாய் பணிக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இயந்திரமா ?

முடிவு : 

நமது தேடலில், மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்டதாக பரப்பப்படும் பாலம் அமைக்கும் ராணுவ வாகனத்தின் வீடியோ தவறானது. அந்த வீடியோ லித்துவேனியா நாட்டில் போலந்து நாட்டு படையினருடன் நடத்தப்பட்ட ராணுவ பயிற்சி வீடியோ எனத் தெரிந்து கொள்ள முடிந்தது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close