மேக் இன் இந்தியாவில் உருவான ரயில்கள் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியா ?

பரவிய செய்தி

“ மேக் இன் இந்தியா ” திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ரயில் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி.

 

மதிப்பீடு

சுருக்கம்

சரியானவை: இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரயில் ஆஸ்திரேலியா விற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

தவறானவை: படம்

உண்மை:

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரயில் பெட்டிகள் ஆஸ்திரேலிய நாட்டிற்க 2016-ல் கப்பல் மூலமே ஏற்றுமதி செய்யப்பட்டன. படத்தில் காட்டப்பட்டுள்ள ரயிலை ஏற்றுமதி செய்யும் விமானம் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தது. இதற்கும் இந்தியாவிற்கு சம்பந்தமில்லை.

விளக்கம்

பிரம்மாண்டமான விமானத்தில் இரயிலின் பெட்டிகளை ஏற்றுமதி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரல். பிரதமர் மோடியின் “ மேக் இன் இந்தியா “ திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ரயில் பெட்டிகள் விமானம் மூலம் ஏற்றுமதி செய்வதாக செய்தி.

இந்த செய்தியை பார்த்தவர்கள் தவறான செய்தி என்றும், போட்டோஷாப் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், பரவும் செய்தியில் புகைப்படங்கள் மட்டுமே தவறானதாகும்.

பிரம்மாண்டமான விமானம் :

இந்தியாவில் இருந்து ரயில்களை ஏற்றுமதி செய்யும் விமானங்கள் எனப் பதிவிடப்பட்ட படங்களில் உள்ள விமானங்கள் ரஷ்யாவை சேர்ந்தவை. ரஷ்யாவில் Antonov An-225 விமானத்தை ரயில்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை கொண்டு செல்ல பயன்படுத்துகின்றனர்.

Antonov An-225 விமானத்தில் ரயில் பெட்டிகள், ஹெலிகாப்டர்களை ஏற்றுமதி செய்யும் வீடியோ Youtube-ல் military update என்ற சேனலில் 2017 ஆம் ஆண்டில் வெளியாகி இருக்கிறது.

அந்த விமானத்தின் படங்களையே ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்வதாக தவறாக பகிர்ந்து உள்ளனர்.

மேக் இன் இந்தியா :

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரயில்கள் ஆஸ்திரேலிய நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது உண்மையே. 2016-ல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 6 ரயில் பெட்டிகள் மும்பை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அவை விமானம் மூலம் கொண்டு செல்லப்படவில்லை. கப்பல்கள் மூலமே ஏற்றுமதி செய்யப்பட்டன.

இரண்டாவது முறையாக மீண்டும் ரயில்கள் ஏற்றுமதி செய்யும் ஆர்டரை 2018 டிசம்பரில் Alstom பெற்றுள்ளது. மும்பை மெட்ரோ லைன் 3-க்குமான  தயாரிப்பு பணிகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நடைபெறும் என செய்தியில் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரயில்கள் கப்பல்கள் மூலமே ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. விமானத்தின் படங்கள் மட்டுமே தவறான தகவல்.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button