This article is from May 27, 2019

கடற்கரையில் நீல நிறத்தில் ஒளிரும் அதிசயம் | எதனால் நிகழ்கிறது ?

பரவிய செய்தி

மாலத்தீவில் உள்ள கடற்கரை இரவில் நீல நிறத்தில் பிரகாசமாய் ஒளிருகிறது.

மதிப்பீடு

விளக்கம்

இரவில் வானில் மின்னும் நட்சத்திரங்கள் போன்று கடற்கரையில் ஒளிர்ந்தால் எப்படி இருக்கும் ? அதிலும் நீல நிறத்தில் ஒளி வீசுவது கண்கவர் காட்சியாக இருக்கும். மாலத்தீவின் கடற்கரையில் நீல நிற ஒளி வீசுவது ஆச்சரியத்தை அளிக்கின்றன. அதற்கான காரணம் ரகசியங்களாக இருந்து வந்தன.

நீல ஒளியில் மின்னும் இக்கடற்கரை மாலத்தீவில் உள்ள வாதோ(vaadhoo) தீவில் இருக்கும் பகுதியாகும். இது 500 பேர் மட்டுமே வசிக்கும் சிறிய தீவாகும். இந்த தீவின் கடல் பகுதி நீலநிறத்தில் ஒளிரும் அதிசய நிகழ்வால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது.

அக்கடலில் வாழும் நீர்வாழ் உயிரினங்கள் இயற்கையாகவே வெளியேற்றும் ஒளியின் விளைவே நீல நிறத்திற்கு காரணம். இவை உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளியாகும். இந்த மின்னும் நிகழ்விற்கு பின்னால் பல வேதி அறிவியல் இருப்பதாக கூறப்படுகிறது.

நீர்வாழ் நுண்ணியிர்களின் விளைவால் நீலநிற ஒளி ஏற்படுவதால் கடற்கரை மணலிலும் அதனை காண முடிகிறது. அந்த கடல் நீரில் பாதங்களை நனைத்த பிறகு வைக்கும் சுவடுகளில் நீல நிறத்திலானவையை பார்க்க முடியும் என்கிறார்கள்.

இப்படியொரு நிகழ்வை ரசிக்க விருப்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு வாதோ தீவு அற்புதமான வாய்ப்பாக இருக்கும். இந்த பகுதி மாலத்தீவின் தலைநகரான மாலே-வில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது.

இத்தகைய உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளியை மாலத்தீவு பகுதியை தவிர்த்து ஆஸ்திரேலியா, தாய்லாந்து, வியட்நாம், சன் டியாகோ, ஜமைக்கா ஆகிய பகுதிகளும் bioluminescent plankton எனும் நீரில் நீல ஒளி வீசுவதை பார்க்க முடியும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader