மாலத்தீவின் சுற்றுச்சூழல் அமைச்சரை தாக்கியவர் பயங்கரவாதியா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

மாலத்தீவின் சுற்றுச்சூழல் அமைச்சர் மீது #SarTanSeJuda தாக்குதலை நடத்துவதற்கு முன் ஜிஹாதி குரானின் சில வசனங்களை ஓதினார். தீவிரவாதிகள் தீவிரவாதத்தை விரும்புகிறார்கள், ஆனால் உண்மை பேசுபவர்களை வெறுக்கிறார்கள்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தெலங்கானா மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜாசிங் நபிகள் நாயகம் பற்றி அவதூறு பேசி வழக்கிற்காக கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சஞ்சல் கூடா சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக, பாஜக மேலிடம் நேற்று அவரை இடைநீக்கம் செய்தது.

இவ்விவகாரத்தைத் தொடர்ந்து முகமது நபிகள் பற்றி அவதூறாக பேசிய நுபுர் சர்மா மற்றும் ராஜா சிங் ஆகியோருக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு தெரிவிக்கும் வகையில், மாலத்தீவில் பயங்கரவாதி ஒருவர் குரானின் உள்ள வசனத்தை கூறிக் கொண்டே சுற்றுச்சூழல் அமைச்சர் அலி சாலிக் மீது தாக்குதல் நடத்திய நபர் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சாலும் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

உண்மை என்ன ? 

மாலத்தீவு சுற்றுச்சூழல் அமைச்சர் அலி சாலிக்கை ஒருவர் கூர்மையான பொருளால் குத்தி தாக்க முயன்ற சம்பவம் இந்திய செய்திகளில் வெளியாகி வருகிறது. மாலத்தீவின் ஹுல்ஹுமாலே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற அமைச்சரை தாக்கிய நபர் குரானில் இருந்து சில வாசகங்களைக் கூறியதாக சில மாலத்தீவு ஊடகங்கள் தெரிவித்தன என WION செய்தியில் வெளியாகி இருக்கிறது.

Twitter link | Archive link 

மாலத்தீவைச் சேர்ந்த சன் இணையதளத்தின் பத்திரிக்கையாளர் மோவியாத் அன்வர் என்பவர் வைரல் செய்யப்படும் வீடியோவை ஆகஸ்ட் 22-ம் தேதி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து மேற்கொண்டு தேடிய போது மாலத்தீவின் சன் ஊடகத்தின் இணையதளத்தில் தாக்குதல் நடத்திய நபர் குறித்து வெளியான செய்தியில், ” அமைச்சரை தாக்கிய நபர்  மனநலம் பாதிக்கபட்டவர் என பாலின அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்பாக இரவு போக்குவரத்து காவலர்கள் இருவரை கொன்று விடுவேன் என மிரட்டி இருக்கிறார். மேலும், ஒருமுறை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் லோகோ இடம்பெற்ற உடை அணிந்து கொண்டு மசூதியில் தொழுகை நடத்தியதால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

அவரை தனிமைப்படுத்துமாறு அங்குள்ள மக்கள் கூறி இருக்கிறார்கள், ஆனால் குடும்பத்தினர் தரப்பில் அவருக்கான சிகிச்சைகள் கவனிக்கப்பட்டு வருவதாகவும், அவரை தனிமைப்படுத்த குடும்பத்தினர் மற்றும் மருத்துவர் தரப்பில் கூறவில்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது ” என வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், மாலத்தீவில் சுற்றுச்சூழல் அமைச்சர் அலி சாலிக் மீது தாக்குதல் நடத்திய நபர் பயங்கரவாதி அல்ல. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என மாலத்தீவு நாட்டின் அமைச்சகம் தெரிவித்து உள்ளது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader