This article is from Feb 16, 2022

மு.க.ஸ்டாலினின் சமூக நீதி அமைப்பில் சேர அவசியமில்லை என்றாரா மம்தா ?

பரவிய செய்தி

ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர வேண்டிய அவசியமில்லை. சமூக நீதியில் திரிணாமுல் காங்கிரஸ் பல பணிகளை செய்துள்ளது. திமுக போல் ஒரு குடும்பம் முடிவெடுக்க முடியாது எங்கள் கட்சி நிர்வாகிகள் தான் முடிவெடுக்க முடியும் – மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி.

மதிப்பீடு

விளக்கம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர வேண்டிய அவசியமில்லை என மேற்கு வாங்க முதல்வர் மம்தா கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Twitter link

உண்மை என்ன ? 

மு.க.ஸ்டாலின் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கைகளை முன்னெடுப்பதற்காக ” அகில இந்திய சமூகநீதி  கூட்டமைப்பு ” என்ற ஓர் கூட்டமைப்பை உருவாக்கி 37 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதமும் எழுதி இருந்தார். அவரின் அழைப்பை காங்கிரஸ் சார்பில் ஏற்கப்பட்டு கட்சி பிரதிநிதியும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் சமூக நீதி கூட்டமைப்பில் சேர வேண்டிய அவசியமில்லை என மம்தா கூறியதாக பரவி வருகிறது. இதுகுறித்து, தந்தி டிவி சேனலின் முகநூல் பக்கத்தில் தேடுகையில், அவ்வாறான எந்த செய்தியும் வெளியாகவில்லை.

மேற்கு வங்க முதல்வர் மம்தா சமூக நீதி கூட்டமைப்பில் சேர வேண்டிய அவசியமில்லை என திமுகவை விமர்சித்ததாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. இது எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டே.

சமீபத்தில், மாநில ஆளுநர்களின் நடவடிக்கைள் தொடர்பாக விவாதிக்க மம்தா பானர்ஜி பாஜக அல்லாத எதிர்க்கட்சி முதல்வர்களின் சந்திப்புக் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுவிக்காமல், மாநில முதல்வர்களான மு.க.ஸ்டாலின், சந்திரசேகர ராவ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்து உள்ளதாக பிப்ரவரி 14-ம் தேதி செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர வேண்டிய அவசியமில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader