மம்தா EVM-க்கு எதிராக ஆதாரத்துடன் குற்றம் சுமத்துவதாக வைரலாகும் வீடியோ !

பரவிய செய்தி

மம்தா பானர்ஜி தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் தேர்தல் அதிகாரிகளிடம் கேட்கச் சென்றால் அனுமதி மறுக்கப்படுகிறது. மம்தா பானர்ஜி ஆட்சியில் இருக்கும் பொழுதே தேர்தல் அதிகாரிகள் இப்படி நடந்து கொள்கிறார்கள். இது யாருக்கான ஆட்சி ?

மதிப்பீடு

விளக்கம்

தேர்தல் முடிவுகள் வெளியான சில தினங்களில் இருந்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசும் வீடியோ பதிவு ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தமிழில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவானது, தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக, EVM முறைகேடுகளுக்கு எதிராக மம்தா ஆதாரத்துடன் இருப்பதாகக் கூறி இடம்பெற்று வருகிறது.

Advertisement

முதலில் வீடியோவை காணும் பொழுது மம்தா பானர்ஜி தோற்றமே வேறு விதமாக இருந்தது. சமீபத்தில், மம்தா பானர்ஜியின் தோற்றத்திற்கும், வீடியோவில் இருக்கும் தோற்றத்திற்கும் வித்தியாசம் இருந்ததையடுத்து, வைரலாகும் வீடியோ பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த பழைய வீடியோவாக இருக்கலாம் என தீர்மானிக்க முடிந்தது.

வீடியோ பதிவை குறித்து இணையத்தில் ஆராய்ந்து பார்க்கையில், kajalchowdhury என்ற Youtube பக்கத்தில் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி மம்தா பானர்ஜியின் இதே வீடியோ ” Mamata Banerjee ransack the West Bengal Assembly !!!!! ” என்ற தலைப்பில் பதிவிட்டு இருந்தனர். மம்தா பானர்ஜி ஆதரவாளர்கள் மேற்கு வங்க சட்டசபையில் அராஜகம் செய்ததாக பதிவிட்டு இருக்கின்றனர்.

வீடியோவில் பேசிய வங்க மொழி பேச்சின் மொழிப்பெயர்ப்பில் இருந்து அவர்கள் சிங்குர் பகுதியில் டாடா நிறுவனம் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிராக மேற்கு வங்க சட்டசபையில் கோஷங்களை எழுப்பியதையும், முழு நீள வீடியோவில் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அங்குள்ள பொருட்களை உடைக்கும் காட்சியையும் காண முடிந்தது.

Advertisement

மம்தா பானர்ஜியின் அரசியல் வாழ்க்கையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவத்தின் வீடியோவை சமீபத்தில் EVM மற்றும் தேர்தல் முறைகேடுக்கு எதிராக பேசியதாக தவறாக பரப்பி வருகின்றனர். கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பரவும் செய்தி தவறானது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close