This article is from Mar 16, 2021

மம்தா பானர்ஜி காலில் கட்டு இடம் மாறியதா, எழுந்து நடந்தாரா ?

பரவிய செய்தி

மருத்துவமனையில் இடது காலில் இருந்த கட்டு வெளியே வரும் போது வலது காலில் மாறியுள்ளது. மூன்றாம் நாளில் வீல் சேரில் இருந்து எழுந்து நடக்கும் மம்தா பானர்ஜி.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், காலில் காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பாகியது. ஆனால், கார் கதவு இடித்தே மம்தா காலில் அடிபட்டதாக பெங்கால் தலைமை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தாக்கல் செய்து இருந்தார். மறுபுறம், இது மம்தாவின் நாடகம் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வரும் மம்தாவின் வலது காலில் கட்டு போட்டு உள்ளது. ஆனால், மருத்துவமனையில் இடது காலில் கட்டு இருந்ததாக இரு புகைப்படங்களை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அதேபோல், மம்தா பானர்ஜி வீல் சேரில் இருந்து எழுந்து நடந்து வருவது போன்ற புகைப்படமும் இந்திய அளவில் பரப்பப்பட்டு வருகிறது.

Archive link 

மருத்துவமனையில் இருந்து வெளியே வீல் சேரில் வரும் போது இடது காலில் கட்டுடனே மம்தா அழைத்து வரப்படுகிறார். அந்த புகைப்படத்தை மிரர் செய்து வலது காலில் கட்டு உள்ளதாகக் கூறி பரப்பி வருகிறார்கள்.

அடுத்ததாக, மருத்துமனையில் இருந்து வீல் சேரில் அழைத்து வரப்படும் மம்தா பானர்ஜி எழுந்து நடந்து வருவது போன்ற ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்து வருகிறார்கள்.

ஆனால், இதுவும் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படமே. 2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை வீல் சேர் அருகே நடந்து வருவது போன்று ஃபோட்டோஷாப் செய்து இருக்கிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் காலில் கட்டு இடம் மாறியதாகவும், மருத்துவமனைக்கு வெளியே வீல் சேரில் இருந்து நடந்து செல்வதாக வைரல் செய்யப்படும் புகைப்படங்கள் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டவை என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader