திருமணம் செய்யுமாறு கூறிய பெண்ணை கொடூரமாக தாக்கிய ‘இந்து இளைஞரை’ முஸ்லீம் என வதந்தி பரப்பும் வலதுசாரிகள்

பரவிய செய்தி

கோடிக்கணக்கான பெற்றோர்கள், சமுதாயம் என்ன தான் விளக்கிய பின்னரும் “‘என் அப்துல் அப்படி இல்லை’ என்று சொல்லும் இந்துப் பெண்களுக்கு இதே போன்ற ஒன்று தான் நடக்கிறது.. ஆமாம் ஸ்டைல் ​​வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் இப்படித்தான் நடக்கும் என்பது மட்டும் உண்மை. அவர்களுடைய வளர்ப்பு அப்படி..

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ந்து பெண்கள் முஸ்லீம் ஆண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு எதிரான வாசகங்கள் உடன் பரப்பப்படும் 45 நொடிகள் கொண்ட வீடியோவில், இளம்பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.

வீடியோவில், இளம்பெண்ணுடன் இருக்கும் இளைஞர் அப்பெண்ணை அடித்து, தலையில் மிதித்து கொடூரமாக தாக்குகிறார். இதனால் அந்த பெண் மயக்க நிலைக்கு செல்கிறார். இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் கேமராவில் பதிவு செய்து இருக்கிறார்.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” டிசம்பர் 25ம் தேதி வெளியான தி லால்லன்டாப் எனும் செய்தி இணையதளத்தில், ” மத்தியப் பிரதேசத்தின் ரேவா பகுதியில் 24 வயதான பங்கஜ் திரிபாதி எனும் இளைஞர் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய தன்னுடைய 19 வயது காதலியை தாக்கியதாக ” புகைப்படங்கள் உடன் வெளியாகி இருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து தேடுகையில், ” ரேவா மாவட்டத்தில் மெளகாஞ் பகுதியின் சாலை அருகே 24 வயதான பங்கஜ் திரிபாதி இளம்பெண்ணை தாக்கி உள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி மயக்கநிலையில் இருந்த அப்பெண்ணை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ” என டிசம்பர் 25ம் தேதி ஏஎன்ஐ செய்தியில் வெளியாகி இருக்கிறது.

Twitter link 

இச்சம்பவம் தொடர்பாக பங்கஜ் திரிபாதி மீது நீதிமன்ற நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பாகவே, பங்கஜ் திரிபாதியின் வீட்டை புல்டவுசர் கொண்டு இடிக்கும் காட்சியை மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் செளகான் அதிகாரப்பூர்வ அலுவலக ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Twitter link 

முடிவு : 

நம் தேடலில், முஸ்லீம் ஆண்களை திருமணம் செய்யும் இந்து பெண்களுக்கு இதான் நிலை எனப் பரப்பப்படும் வீடியோவில், பெண்ணை தாக்கும் நபர் முஸ்லீம் அல்ல, அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவரே. மத்தியப் பிரதேசத்தில் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய காதலியை கொடூரமாக தாக்கிய பங்கஜ் திரிபாதியை போலீசார் கைது செய்து உள்ளனர் என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader