This article is from Oct 19, 2020

கிறிஸ்தவர் என்பதால் சிரியாவில் மரணத் தண்டனை அளித்ததாக வதந்தி !

பரவிய செய்தி

சிரியாவில் நற்செய்தியைப் பிரசங்கித்ததற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் கிறிஸ்துவைச் சந்திக்க நேரம் வருவதை அறிந்திருந்ததால் தூக்கு மேடைக்குச் சிரித்தார். இதற்கிடையில், நம்மில் பலர் இந்த உலக விஷயங்களால் திசைதிருப்பப்படுகிறார்கள். வீண் காரணங்கள், வீண் அமைப்புகள். கிறிஸ்துவுக்காகச் செய்தவை மட்டுமே நீடிக்கும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதற்காக நீங்கள் மரிப்பீர்களா? மேலும், உங்களில் கர்த்தருடைய சந்தோஷம் உண்டா?

Facebook Link | Archive Link 

மதிப்பீடு

விளக்கம்

இவர் கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட காரணத்தினால் சிரியாவில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும், கடவுள் மீது அவருக்கு இருந்த தீவிரமான நம்பிக்கையால் தூக்கிலிடப்படும் போது சிரித்ததாகவும் தூக்கு மேடையில் சிரிப்புடன் நிற்கும் ஒருவரின் புகைப்படம் பல மொழிகளில் பகிரப்பட்டு வருகிறது.

Facebook Link | Archive Link  

உண்மை என்ன ? 

” ஹம்சா பெண்டெலட்ஜ் என்ற ஹேக்கர் அமெரிக்காவின் வங்கிகளை ஹேக்கிங் செய்து பல மில்லியன் டாலர்களை திருடி பல நாடுகளில்(பாலஸ்தீனம்) உள்ள ஏழைகளுக்கு உதவி உள்ளார் . இதனால் அவருக்கு மரணத் தண்டனை அறிவித்து தூக்கிலிடும் முன் சிரித்த முகத்துடன் விடை பெற்றார் ” என கழுத்தில் நீலநிற தூக்குக் கயிறு மாட்டி இருக்க முகத்தில் சிரிப்புடன் இருக்கும் நபரின் இதே புகைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உலக அளவில வைரலான ஒன்று. ஆனால், அதுவும் தவறான தகவல் என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

விரிவாக படிக்க : ஹேக்கர் ஹம்சா பெண்டெலட்ஜ் தூக்கிலிடப்பட்டாரா ?

2007-ம் ஆண்டில் ஈரானிய நீதிபதியைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட மஜீத் மற்றும் அவரது மருமகன் ஹொசைன் காவோசியர் ஆகிய இருவரும் தெஹ்ரானின் எர்ஷாத் நீதித்துறை வளாகத்தில் மக்கள் மத்தியில் பகிரங்கமாக கிரேனில் தூக்கிலிடப்பட்டனர். வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர் மஜீத்.

2005-ல் மத்திய டெக்ரானில் நீதிபதி ஹாசன் மொக்தாடாஸ் படுகொலை செய்த மஜீத் மற்றும் அவரது மருமகனான ஹொசைன் ஆகிய இருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக சிரித்துக்கொண்டே தன் மருமகனை பார்த்து கை அசைத்து உள்ளார் மஜீத்.

முடிவு : 

நம் தேடலில், சிரியாவில் கிறிஸ்தவர் என்பதால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டதாக தவறான தகவல் உடன் பரப்பப்படும் [புகைப்படத்தில் இருப்பவர் 2007-ல் ஈரானிய நீதியைக் கொண்டதற்காக தூக்கிலிடப்பட்ட மஜீத் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader