மணிப்பூரில் ஆறுதல் சொல்ல சென்ற பாஜக நிர்வாகிகளை மக்கள் விரட்டி அடித்ததாகப் பரவும் பழைய வீடியோ !

பரவிய செய்தி
மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆறுதல் சொல்ல சென்ற உள்ளூர் பாஜக நிர்வாகிகளை அங்குள்ள மக்கள் விரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது!Twitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
மணிப்பூர் மாநிலத்தில் பதட்டமான சூழ்நிலை திரும்பிவரும் நிலையில், மணிப்பூர் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள I.N.D.I.A கூட்டணியைச் சேர்ந்த 21 எம்பிக்கள் அடங்கிய குழு ஒன்று இரண்டு நாள் பயணமாக கடந்த ஜூலை 29 அன்று மணிப்பூர் சென்றது.
இந்நிலையில் மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆறுதல் சொல்ல சென்ற உள்ளூர் பாஜக நிர்வாகிகளை அங்குள்ள மக்கள் விரட்டும் காட்சி என்று கூறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் காவிநிற துண்டுகளை கழுத்தில் அணிந்துள்ள மூன்று பேரை, கும்பல் ஒன்று அடித்து விரட்டும் காட்சி காட்டப்பட்டுள்ளது.
The people of Manipur have recognized BJP & RSS Democracy that soon other countries will also do the same. #ManipurVideo #ManipurViolence #ManipurHorror #आदिवासी_विरोधी_RSS_BJP @AdivasisMatter@AdivasiDastak #Hindu #Muslim_Identity #DalitLivesMatter @newsbeak pic.twitter.com/reZDqvPgOI
— South Asia Democratic Voices Forum (@southasiadforum) July 22, 2023
The people of #Manipur have recognized that the people of the rest of the country will soon do the same thing, #BJP people have come wearing saffron coloured #Manipuri gamchha to show sympathy, people took off their dhoti.#ManipurBurning pic.twitter.com/VL3UrodUnH
— Gazi Omer (@GaziOmer5) July 24, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2017ல் இருந்தே சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
Rifat Jawaid என்பவரது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2017 அக்டோபர் 06 அன்று பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில், “வங்காளத்தின் பாஜக தலைவரான திலீப் கோஷ் டார்ஜிலிங்கில் வைத்து தாக்கப்பட்டார். கோர்கா மக்களால் தலைவர்கள் இரக்கமின்றி தாக்கப்பட்டனர். (முழு வீடியோ உள்ளே)” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
BJP’s Bengal chief Dilip Ghosh attacked in Darjeeling, leaders thrashed mercilessly by Gorkhas (Full Video inside) https://t.co/oNhHxKuTEp pic.twitter.com/R53s4qt4nD
— Rifat Jawaid (@RifatJawaid) October 6, 2017
மேலும், ABP NEWS தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவும், சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவுடன் ஒத்துப்போவதை காண முடிந்தது. “டார்ஜிலிங்கில் பாஜக தலைவர் திலீப் கோஷ் மீது தாக்குதல்” என்ற தலைப்புடன் கடந்த 2017 அக்டோபர் 06 அன்று இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மணிப்பூர் சென்ற எதிர்க்கட்சியினரிடம் ‘மோடி எங்களை பார்த்துக் கொள்வார்’ என மெய்தியினப் பெண் கூறியதாகப் பரவும் பொய் !
மேலும் படிக்க: மணிப்பூர் பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பரவும் மியான்மரின் பழைய வீடியோ !
முடிவு:
நம் தேடலில், மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல சென்ற உள்ளூர் பாஜக நிர்வாகிகளை மக்கள் விரட்டும் காட்சி எனப் பரவி வரும் வீடியோ மணிப்பூரில் எடுக்கப்பட்டது அல்ல. கடந்த 2017ன் போது மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெளிவாகிறது.