மணிப்பூர் கலவரத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு எனப் பரவும் கேம் வீடியோ !

பரவிய செய்தி
இது ஒரு பிரமாண்ட திரைப்பட காட்சியல்ல மணிப்பூரில் அரங்கேற்றிய வன்முறை.Twitter link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியினரல்லாத மெய்தியினருக்கு (Meetei or Meitei) பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) அந்தஸ்து வழங்கப்பட போவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற போராட்டங்களானது கலவரமாக மாறி அம்மாநிலமே பற்றி எரிந்தது. இதன் விளைவால் அங்கு இராணுவம் குவிக்கப்பட்டதோடு, கலவரக்காரர்களை கண்டால் சுடவும் உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையில், மணிப்பூர் கலவரத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு என சரமாரியாக துப்பாக்கியில் இருந்து குண்டுகள் வெளியேறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Here is a video of Kuki people firing’s shots at Meitei people .Is this what you guys called a peace rally and trying to be the victim #manipurisburning #manipur_on_fire #NarendraModi #NDTVExclusive #AmitShah pic.twitter.com/5yuTHdklMu
— Walmart Banana (@BananaWalmart) May 4, 2023
மேலும், மணிப்பூரில் நடக்கும் கலவரத்தில் குக்கி இன மக்கள் மெய்தியின மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவதாகவும் இவ்வீடியோவை பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு தேடுகையில், 2023ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி ஐ லவ் அர்மாஸ் எனும் ட்விட்டர் பக்கத்தில் இவ்வீடியோ பதிவாகி இருக்கிறது.
Tô apaixonado nesses vídeos com rajadão de fuzil ou pistola à noite com mira a laser ou lanterna acoplada. Vou postar + videos assim no @lovearmasvideos toda semana, sigam lá tbm✌️ pic.twitter.com/wbL5lhZwmI
— I Love Armas (@Ilovearmas_) April 28, 2023
மேற்கொண்டு தேடுகையில், 2020 ஜூலை 5ம் தேதி Threatty எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவ்வீடியோவை பதிவிட்டு இருக்கின்றனர். அதில், Call of duty, GTA, Freefire போன்ற விளையாட்டுகளின்(கேம்) பெயர்களை ஹாஷ்டாக்களாக கொடுத்துள்ளனர்.
மேலும் படிக்க : ‘என் மாநிலம் பற்றி எரிகிறது’ : மேரி கோம்.. மணிப்பூரில் தொடரும் கலவரங்கள்… காரணம் இது தான்!
இதற்கு முன்பாக, மணிப்பூரில் நிகழும் கலவரங்களுக்கான காரணங்கள் குறித்த விரிவான கட்டுரையும் யூடர்ன் தரப்பில் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், மணிப்பூரில் அரங்கேறிய வன்முறையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு எனப் பரப்பப்படும் வீடியோ பொய்யானது. அந்த வீடியோ கடந்த 2020ல் இருந்து பரவி வரும் கேம் வீடியோ என்பதை அறிய முடிகிறது.