மணிப்பூர் வன்கொடுமை சம்பவத்தில் கைதானவர் ஆர்எஸ்எஸ் உடையில் இருப்பதாகப் பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
மணிப்பூர் மாநிலத்தில் நிகழும் வன்முறை சம்பவத்தில் கும்பல் ஒன்று பழங்குடியின பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவங்கள் நாடு முழுவதிலும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்து வருவதாக மணிப்பூர் காவல்துறை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெண்களை வன்கொடுமை செய்த வீடியோ தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் ஆர்எஸ்எஸ் உடையில் இருப்பதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
ஆர்எஸ்எஸ் உடையில் இருப்பவர்களின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2022ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி சித்தானந்தா சிங் (Chidananda Singh) என்பவரின் முகநூல் பக்கத்தில் இப்புகைப்படம் பதிவாகி இருந்ததை பார்க்க முடிந்தது.
சித்தானந்தா சிங் மணிப்பூர் பாஜகவின் மாநில துணைத்தலைவராக உள்ளார். அவருடையப் பதிவில், அக்டோபர் 16ம் தேதியன்று என் மகன் சச்சினந்தா மற்றும் உறவினர் அசோக் உடன் இம்பால் பகுதியில் நடந்த ஆர்எஸ்எஸ் பத் சஞ்சலன் நிகழ்ச்சயில் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
Why u people use photo of myself a my son? Let us meet at Court, I am filling Criminal/defamation suit against those propagating such fake news. I am Chidananda Singh, State Vice President BJP Manipur n my family never involved such heinous crime.
— Chidananda Singh (@ChChidananda) July 23, 2023
புகைப்படம் வைரலான பிறகு சித்தானந்தா சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், எதற்கான எனது மகனின் புகைப்படத்தை பயன்படுத்துகிறீர்கள். இது போன்ற பொய்யான செய்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்கிறேன். நான் பாஜகவின் மணிப்பூர் மாநில துணைத் தலைவர். எனது குடும்பம் இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபடவில்லை எனப் பதிவிட்டு இருக்கிறார்.
மேலும், சித்தானந்தா சிங் காவல்துறைக்கு அளித்த புகார் அறிக்கை மற்றும் அவரின் அடையாள அட்டை உள்ளிட்டவை ஆர்எஸ்எஸ் அமைப்பின் சமூக வலைதள குழுவில் உள்ள Bunch Of Thoughts எனும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
along with a caption that they were directly involved in the crime was uploaded in various social media platform.
2/3
— Manipur Police (@manipur_police) July 23, 2023
இதுகுறித்து மணிப்பூர் காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில், பெண்களின் வன்கொடுமை வீடியோ வழக்குடன் அரசியல் கட்சி தலைவர் மற்றும் அவரின் மகன் உடைய புகைப்படத்தை பயன்படுத்தி போலிச் செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக அளிக்கப்பட்ட புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பதிவிடப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க : மணிப்பூரில் பெண் ஒருவர் நிர்வாணமாகக் காவலர்களைத் தாக்குவதாகப் பரவும் பொய் செய்தி !
மேலும் படிக்க : மணிப்பூரில் பழங்குடியின பெண்களின் வன்கொடுமை வழக்கில் அப்துல் ஹிலீம் என்பவர் கைது என தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் !
மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. அதன் உண்மைத்தன்மை குறித்து யூடர்ன் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம்.
முடிவு :
நம் தேடலில், மணிப்பூரில் பெண்களை வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபர் ஆர்எஸ்எஸ் உடையில் இருப்பதாக பரப்பப்படும் தகவல் தவறானது. அந்த புகைப்படத்தில் இருப்பது அம்மாநில பாஜகவின் துணைத் தலைவர் மற்றும் அவரின் மகன் என்பதை அறிய முடிகிறது.