பிரதமர் மோடியை ட்விட்டரில் பாராட்டிய மன்மோகன் சிங் எனப் பரவும் போலி ட்விட்டர் பக்க பதிவுகள் !

பரவிய செய்தி
நானும் பெரிய முடிவுகளை எடுக்க முடியும், ஆனால் காங்கிரஸ் என்னை சொந்தமாக எந்த வேலையையும் செய்ய விடவில்லை, நரேந்திர மோடியே முடிவுகளை எடுக்கிறார், அதனால்தான் நாடு முன்னேறுகிறது. இன்று நான் வெளிப்படையாக சொல்கிறேன், மோடி போன்ற ஒரு தலைவர், மீண்டும் உலகம் முழுவதும் பிறக்க மாட்டார். – மன்மோகன் சிங் மோடிTwitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கட்சி அரசியலை மறந்து பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியுள்ளார் பாருங்கள் என்று கூறி, அவருடைய ட்வீட் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
மேலும் பரவிவரும் அவருடைய ட்விட்டர் பதிவுகளில், “நானும் பெரிய முடிவுகளை எடுக்க முடியும், ஆனால் காங்கிரஸ் என்னை சொந்தமாக எந்த வேலையையும் செய்யவிடவில்லை, நரேந்திர மோடியே முடிவுகளை எடுக்கிறார், அதனால்தான் நாடு முன்னேறுகிறது.” என்றும், “இன்று நான் வெளிப்படையாக சொல்கிறேன், மோடி போன்ற ஒரு தலைவர், மீண்டும் உலகம் முழுவதும் பிறக்க மாட்டார்.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சி அரசியலை மறந்து முன்னாள் பிரதமர் ஸ்ரீமன் மன்மோகன் சிங் மனம் திறந்து பேசியது இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
*”பெரிய முடிவுகளை என்னால் செயல்படுத்த முடியும் ஆனால் எனது விருப்பப்படி எந்த வேலையையும் செய்ய காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. நரேந்திர மோடி தனக்கென முடிவுகளை pic.twitter.com/QnjbZ4D3hw
— BJP Sulur South Union (@BJP_Sulur_south) June 17, 2023
கட்சி அரசியலை மறந்து முன்னாள் பிரதமர் ஸ்ரீமன் மன்மோகன் சிங் மனம் திறந்து பேசியது இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
*”பெரிய முடிவுகளை என்னால் செயல்படுத்த முடியும் ஆனால் எனது விருப்பப்படி எந்த வேலையையும் செய்ய காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. pic.twitter.com/CsQKUGaFCp— prasanna cp (@cp_prasanna) June 17, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தப் படம் கடந்த 2021-லிருந்தே சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதை அறிய முடிந்தது. மேலும் இதன் உண்மையான பதிவுகள் manmohan_5 என்னும் கணக்கிலிருந்து கடந்த 2021 செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பதிவிடப்பட்டுள்ளன.
மேலும் பதிவிடப்பட்ட ட்விட்டர் ஐடி (manmohan_5) குறித்து தேடியதில், அது போலியான ஐடி என்பதையும், இப்போது அது பயன்பாட்டில் இல்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
இதற்கு முன்பாகவும் மன்மோகன் சிங்கின் பெயரில் போலியாக பல பதிவுகள் ட்விட்டரில் பதிவிடப்பட்டன. அவர் பெயரில் உள்ள போலியான ட்விட்டர் கணக்குகளின் விவரங்கள் பின்வருமாறு:
அவருடைய போலியான கணக்குகள் குறித்து காங்கிரஸ் சமூக ஊடகத் துறையின் தேசிய ஒருங்கிணைப்பாளரான சரல் படேல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ முன்னதாக, மன்மோகன் சிங் பற்றி சில ட்வீட்கள் பொய்யாக கூறப்பட்டது, மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கவில்லை, மேலும் அவர்கள் ட்விட்டருக்கு வர முடிவு செய்தால், அது சரிபார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வமான ட்விட்டர் கணக்குகளாகத் தான் இருக்கும். அவர்களின் போலி கணக்குகளைப் பின்தொடர வேண்டாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Tired of people asking, If this account is authentic or not. This is not the first time and won’t be the last, so making it clear for once and all.
If Sonia Ji or MMS Ji decides to come on Twitter, They will have a VERIFED twitter account.
So please don’t follow fake accounts. https://t.co/O7vwVrYaxX
— Saral Patel (@SaralPatel) June 19, 2020
முடிவு:
நம் தேடலில், பிரதமர் மோடியை ட்விட்டரில் மன்மோகன் சிங் பாராட்டினார் எனப் பரவிவரும் ட்வீட் பதிவுகள் போலியானவை என்பதையும், மன்மோகன் சிங் ட்விட்டரில் எந்தவொரு அதிகாரப்பூர்வ கணக்கும் வைத்திருக்கவில்லை என்பதையும் அறிய முடிகிறது.