இந்தியாவிற்கு மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறினாரா ?

பரவிய செய்தி

பலவீனமான வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த, இந்தியாவுக்கு சரியான திசையையும் நிலைமையையும் வழங்க மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.

Archive Link

மதிப்பீடு

விளக்கம்

பிரிட்டனின் 57வது பிரதமராக ரிஷி சுனக் கடந்த அக்டோபர் 25, 2022 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை எனப் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியதாகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Twitter Link

உண்மை என்ன ?

சமூக வலைத்தளங்களில் வைரலான நியூஸ் கார்டில் இருந்த லோகோ குறித்துத் தேடியதில் அது டானிக் பாஸ்கர்(Dainik Bhaskar) எனும் இந்தி செய்தித்தளத்தின் லோகோ என்பது தெரியவந்தது.

டானிக் பாஸ்கர் செய்தித்தளத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடியதில், 2022 அக்டோபர் 25ம் தேதி ரிஷி சுனக் மற்றும் மன்மோகன் சிங் புகைப்படங்கள் உள்ள ஒரு நியூஸ் கார்டை பயன்படுத்தி ஒரு செய்தி வெளியிட்டிருந்தனர்.

“ஆசியாவை சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்பது இதுவே முதல் முறை. பிரிட்டனில் நடப்பது போல இந்தியாவில் சிறுபான்மை வகுப்பினை சேர்ந்த ஒருவர் பிரதமராக முடியுமா எனக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப. சிதம்பரம் மற்றும் சசி தரூர் கேள்வியெழுப்பியிருந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்ததை அவர்கள் கணக்கில் எடுக்கவில்லையா என பாஜக தரப்பில்  கேள்வியெழுப்பிருந்தனர்” என்ற செய்தியின் நியூஸ் கார்டில் ரிஷி சுனக் மற்றும் மன்மோகன் சிங்கின் புகைப்படங்களை டானிக் பாஸ்கர் செய்தித்தளம் பயன்படுத்தி இருந்தனர் என்பது தெரியவந்தது.

Twitter link 

மேலும், இதுகுறித்து டானிக் பாஸ்கர்(Dainik Bhaskar) இணையதளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தனர்.

இதிலிருந்து, டானிக் பாஸ்கர் வெளியிட்ட நியூஸ் கார்டை போட்டோஷாப் செய்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பரப்பியுள்ளனர் என்பது தெரிய வருகிறது.

Twitter link 

சிறுபான்மை வகுப்பினைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்க முடியுமா என்ற காங்கிரஸ்-பாஜக இடையே மோதல்கள் குறித்து செய்திகளும் வெளியாகி இருக்கின்றன.

இந்தியாவிலுள்ள பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை என ரிஷி சுனக் கூறியதாக எந்த செய்திகளும் வெளியாகவில்லை. அது எடிட் செய்யப்பட்ட போலியான செய்தி.

மேலும் படிக்க : பிரிட்டனின் பிரதமரானதும் ரிஷி சுனக் மனைவியுடன் கோமாதா பூஜை செய்தாரா ?

மேலும் படிக்க : ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரான பின் இஸ்கான் கோவிலுக்குச் சென்றதாகப் பரவும் பழைய வீடியோ !

ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து இந்தியாவில் அவரைப் பற்றிப் பல்வேறு வதந்திகளைப் பரப்பப்பட்டு வருகின்றனர்.

முடிவு :

நம் தேடலில், இந்தியாவிலுள்ள பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை எனப் பரவி வரும் நியூஸ்க்கார்டு எடிட் செய்யப்பட்ட போலியான செய்தி. அப்படி எந்த கருத்தையும் பிரதமர் ஆனதும் ரிஷி சுனக் கூறவில்லை என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader