முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சோனியா காந்தி காலில் விழும் படமா ?

பரவிய செய்தி
ஓபிஎஸ் , ஈபிஎஸ் ஐ கிண்டல் செய்யும் உடன் பிறப்புகள், இது தான் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன்சிங் நிலை.
மதிப்பீடு
விளக்கம்
முன்னாள் காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் மன்மோகன்சிங் சோனியா காந்தி காலில் விழுந்த போது எடுக்கப்பட்ட படங்கள் என கூறி தமிழில் சமூக வலைதளங்களில் இப்படம் பகிரப்படுகிறது. தலையில் டர்பன் கட்டிக் கொண்டு இருக்கும் நபர் சோனியா காந்தி காலில் விழும் புகைப்படங்கள் பார்க்கும் பொழுதே சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடியது
ஏனெனில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உருவம் போன்று உடையணிந்து, டர்பன் உடன் இருக்கலாம், ஆனால் அப்புகைப்படத்தில் யார் என்று முகம் தெரியவில்லை.
Mr. Yeddyurappa, at-least now, show some self respect, and stop bowing to an outsider who can’t even win his own seat!
#KannadaSwabhimana pic.twitter.com/pK2raRdkea
— Karnataka Congress (@INCKarnataka) March 14, 2018
இதற்கு முன்பாகவே, 2018-ல் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்பு எடியுரப்பா தலைக்குனிந்து வணங்கும் புகைப்படத்தை காங்கிரஸ் பதிவிட்டு விமர்சித்து இருந்தது.
— ಚೌಕಿದಾರ್ ಶಕುಂತಲ ರಾಜ್ (@ShakunthalaHS) March 14, 2018
இதற்கு எதிராக, சோனியா காந்தியின் காலில் மன்மோகன்சிங் விழுவதாக இப்படத்தை பதிவிட்டனர் பிஜேபி ஆதரவாளர்கள். சோனியா காந்தி காலில் விழுவது மன்மோகன்சிங் எனக் கூறியது போன்று காங்கிரஸ் எம்எல்ஏ நவ்ஜோத் சிங் சித்து என்றும் செய்திகள் பரப்பப்பட்டன.
மன்மோகன்சிங் அல்லது சித்து ஆகிய இருவருமே சோனியா காந்தி காலில் விழுந்த போது இப்படம் எடுக்கப்பட்டதா என தேடுகையில் எந்த செய்தியிலும் இந்த படங்கள் வெளியாகவில்லை. எனினும், பரவும் படத்தில் ” Getty Image “ என எழுதப்பட்டுள்ளது. அதை வைத்து கூகுளில் தேடிப் பார்க்கையில், புகைப்படங்கள் விற்பனை தளமான ” Getty Image ” யில் படம் சார்ந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
2011 ஆம் ஆண்டில் இந்திய இளைஞர் காங்கிரஸின் மாநாட்டில் பிரதிநிதி ஒருவர் சோனியா காந்தி காலில் விழுகிறார். அதனை, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பார்க்கிறார் என குறிப்பிட்டு உள்ளனர். அப்படத்தில் காலில் விழும் நபர் இளம் வயது நபராக தோற்றம் அளிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
2011 ஆம் ஆண்டில் காங்கிரஸ் இளைஞர் மாநாட்டில் பிரதிநிதி ஒருவர் சோனியா காந்தி காலில் விழுந்த படத்தை வைத்து தவறான செய்திகள் பகிரப்படுகிறது. பொது வெளியில் காலில் விழுந்து மரியாதை செலுத்துவது இன்றைய சூழ்நிலையில் மக்கள் வெறுக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. அது யாராக இருந்தாலும் !
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.