மாரிதாஸிற்கு ஆதரவாக சுப்பிரமணியன் சுவாமி வாதாடப் போவதாக வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
யூடியூபர் மாரிதாஸ், நியூஸ் 18 விவகாரத்தில் மோசடி மெயில் தொடர்பான வழக்கு, நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பதியப்பட்ட வழக்குகள் என தொடர் வழக்குகளை சந்தித்து வருகிறார்.
மேலும் படிக்க : மாரிதாஸ் பரப்பிய வதந்திகள், பொய்களின் தொகுப்பு !
இந்நிலையில், பாஜக ஆதரவாளர் நந்தகோபால் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” மாரிதாஸ் வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராக முடிவு செய்து உள்ளார். இதற்காக வழக்கறிஞர்களுடன் சுவாமி ஜி ஆலோசனை ” என மாரிதாஸ் மற்றும் சுப்பிரமணியன் சுவாமியின் புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார்.
மாரிதாஸ் வழக்கில் ஆஜராக இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி.
ஆட்டம் களைகட்டும் போல
— மதுரைக்காரன் (@Senthil78480667) December 19, 2021
மாரிதாஸ் வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராக இருப்பதாக பாஜக ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கின்றனர்.
உண்மை என்ன ?
ஆனால், இந்த தகவலை சுப்பிரமணியன் சுவாமியே மறுத்துள்ளார். நந்தகோபால் என்பவரின் பதிவில், இது உண்மை இல்லை என சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.
மாரிதாஸிற்காக ஆஜராக போவதாக பதிவிட்ட பதிவை சுப்பிரமணியன் சுவாமியே மறுத்த பிறகும் அந்த பதிவு நீக்கப்படவில்லை.
முடிவு :
நம் தேடலில், மாரிதாஸிற்கு ஆதரவாக சுப்பிரமணியன் சுவாமி வாதாடப் போவதாக பரவும் தகவல் உண்மையில்லை என அறிய முடிகிறது.