வீடியோ, லிங்க்-ஐ ஓப்பன் செய்தால் போனை ஹக் செய்வார்களா ?

பரவிய செய்தி

martineli என்ற பெயரில் ஒரு வீடியோ வாட்ஸ்அப்பில் வெளியிடப்படுகிறது. அதை ஓப்பன் செய்ய வேண்டாம் . ஒரு வேளை ஓப்பன் செய்தால் உங்கள் போனில் உள்ள தகவல்களை 10 வினாடியில் ஹக் செய்து விடும். எனவே உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை ஷேர் செய்யுங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

இந்த தகவல்கள் ஸ்பானிஷ்யில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது, இது தொடர்பாக நம்பத்தகுந்த தகவல்கள் ஏதுமில்லை என்று அந்நாட்டு காவல்துறைத் தெரிவித்துள்ளது.

விளக்கம்

நாளை martineli என்ற பெயரில் ஒரு வீடியோ அனைவருக்கும் அனுப்பப்படுவதாகவும், அதை ஓப்பன் செய்தால் தங்களது தகவல்கள் ஹக் செய்யப்படும் என்றுக் கூறி ஓர் செய்தி வாட்ஸ்அப்பில் வேகமாகப் பரவி வருகிறது.

Advertisement

இணையங்களில் வதந்திகளின் வரவுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. சமூக வலைதளங்களை தொடர்ந்து வாட்ஸ்அப் போன்ற தகவல்கள் பரிமாற்ற செயலிகளிலும் வதந்திகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடவுள் படத்தை ஷேர் செய்தால் நல்லது நடக்கும், இச்செய்தியை ஷேர் செய்தால் ரீசார்ஜ் ஆகும், இப்படத்தை ஷேர் செய்தால் அந்த குழந்தைக்கு பணம் கிடைக்கும் என்றுக் கூறி பல செய்திகள் வந்துக் கொண்டே உள்ளன. இவற்றை தொடர்ந்து ஒரு வீடியோவை பற்றிய செய்தியை வைத்து வதந்திகளை பரப்பியுள்ளனர்.

அந்த செய்தியில் இடம்பெற்ற வார்த்தைகள், martineli என்ற பெயரில் நாளை ஒரு வீடியோ வாட்ஸ்அப்பில் வெளியிடப்படுகிறது. அந்த வீடியோவை ஓப்பன் செய்ய வேண்டும். ஒரு வேளை நீங்கள் ஓப்பன் செய்தால் உங்கள் போனில் உள்ள எல்லா தகவல்களும் 10 வினாடியில் ஹக் செய்யப்பட்டுவிடும். இதை எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்த முடியாது. எனவே இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். இது முற்றிலும் உண்மையே எனக் குறிப்பிட்டு வருகிறார்கள்.


Spanish police tweet archived link  

உலகம் முழுவதும் பரவி வரும் martineli வாட்ஸ் அப் வதந்தி தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. மேலும் இந்த செய்தியின் ஆரம்பம் ஸ்பானிஷ் நாட்டில் இருந்து தொடங்கப்பட்டது.

Advertisement

இது தொடர்பாக நம்பதகுந்த செய்திகள் ஏதும் இல்லை என்றும், இச்செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்றும் அந்நாட்டின் காவல்துறை ட்விட்டரில் 2017-ல் தெரிவித்துள்ளது. எனவே உண்மை எது வதந்தி எது என்று அறியாமல் செய்திகளைப் பரப்பாதீர்கள்.

Updated : 

2017-ல் வைரலாகிய martineli என்ற வாட்ஸ் அப் வதந்திகள் தற்பொழுது மீண்டும் 2019 இறுதியில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற வதந்திகளை பகிர்ந்து மக்களை அச்சமடையச் செய்ய வேண்டாம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button