மெக்சிகன் அரசியல்வாதி உள்ளாடையுடன் எதற்காக போராடினார் ?

பரவிய செய்தி

மெக்சிகோ பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விவாதத்தின் போது தன்னுடைய உடைகளை ஒவ்வொன்றாக களைந்தார். “என்னை பார்க்க உங்களுக்கு வெட்கமாக, கேவலமாக இருக்கிறது, ஆனால் உங்களுக்கு நம் மக்களை தெருக்களில் நிர்வாணமாக, காலில் செருப்பில்லால், வேலையில்லாமல், பசியுடன் ஆற்றோணா நிலையில் பார்க்கும் போது வெட்கமாக இல்லை, அவர்களிடம் இருந்த எல்லா பணத்தையும் உடமைகளையும் பறித்து தெருவில் நிற்கவைத்த போது கேவலமாக இல்லை“ என்றார்.

Facebook Link | Archive Link 

மதிப்பீடு

விளக்கம்

மெக்சிகோ நாட்டின் நாடாளுமன்றத்தில் அரசியல்வாதி ஒருவர் விவாதத்தின்போது தன் உடைகளை களைத்து கொண்டு மக்களின் நிலை மற்றும் ஊழல் குறித்து பேசியதாக இப்புகைப்படம் தமிழில் வைரலாகி வருகிறது. இதே தகவல் பிற மொழிகளில் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் சுற்றி வருகிறது. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது, இதற்கு பின்னால் என்ன நிகழ்ந்தது எனத் தெரிந்து கொள்ளத் தீர்மானித்து ஆராய்ந்து பார்த்தோம்.

Advertisement

Facebook Link | Archive Link  

உண்மை என்ன ? 

மெக்சிகோ பாராளுமன்ற உறுப்பினர் குறித்து தேடுகையில், 2013-ல் டிசம்பர் 13-ம் தேதி ” Mexican Congress approves controversial oil and gas bill ” எனும் தலைப்பில் பிபிசி-யில் வெளியான செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

Advertisement

” அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறையை வெளிநாட்டு முதலீட்டிற்கு திறக்கும் வகையில் இருக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்திற்கு மெக்சிகன் காங்கிரஸ் ஒப்புதல் அளித்து உள்ளது. மேல் சபையான செனட்டால் நிறைவேற்றப்பட்ட பிறகு ஒரு நாளில் சேம்பர் ஆஃப் டெபியூட்டிஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் சேம்பர் ஆஃப் டெபியூட்டிஸ் 354-க்கு 134 என வாக்களிப்பு நிகழ்ந்தது.

பிஆர்டி-யைச் சேர்ந்த எம்.பி அன்டோனியா கார்சியா கோனேஜோ, மசோதாவை நிராகரிப்பதைக் காட்ட அவரது உடைகளை கழட்டி உள்ளாடையுடன் நின்றுள்ளார். ” நீங்கள் தேசத்தை இப்படித்தான் அகற்றுகிறீர்கள். நன்மை எங்கே ? நான் வெட்கப்படவில்லை, நீங்கள் செய்வதுதான் அவமானம்! ” என அவர் தனது உடைகளை அகற்றும் போது பேசியதாக ” பிபிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2013 டிசம்பர் 12-ம் தேதி Chamber of Deputies உடைய யூடியூப் சேனலில் வெளியான 17 நிமிட வீடியோவில், எம்.பி அன்டோனியா கார்சியா கோனேஜோ புதிய எரிசக்தி மசோதா குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது தன் உடைகளைக் களைத்து உள்ளடையுடன் தன் பேச்சைத் தொடர்கிறார்.

மெக்சிகன் நாட்டின் எம்.பி அன்டோனியா கார்சியா கோனேஜோ தனது உடைகளை களைத்து எதிர்ப்பை தெரிவித்து போராடியது ஊழலுக்கு எதிராக அல்ல, 2013-ம் ஆண்டு எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய எரிசக்தி மசோதாவிற்கு எதிராக நிகழ்ந்தது.

வைரல் செய்யப்படும் புகைப்படத்துடன் இடம்பெற்று இருக்கும் நிலைத்தகவலில் உள்ள கருத்தை கோனேஜோ கூறியதாக எந்தவொரு தரவுகளும் இல்லை. ஆனால், தன் உடைகள் கழட்டுவதை உதாரணமாக சுட்டிக்காட்டி, நீங்கள் தேசத்தை இப்படித்தான் அகற்றுகிறீர்கள். நன்மை எங்கே ? நான் வெட்கப்படவில்லை, நீங்கள் செய்வதுதான் அவமானம்! ” என கூறியதாக தரவுகள் உள்ளன.

முடிவு : 

நம் தேடலில், மெக்சிகோ நாடாளுமன்றத்தின் உறுப்பினர் தனது உடைகளை களைத்து நிற்கும் புகைப்படம் 2013-ல் எம்.பி அன்டோனியா கார்சியா கோனேஜோ அந்நாட்டின் புதிய எரிசக்தி மசோதாவிற்கு எதிராக பேசிய போது எடுக்கப்பட்டது. ஆனால், அவர் பேசியதாக பகிரப்படும் நிலைத்தகவலில் இருக்கும் தகவலை அவர் கூறியதாக ஆதாரங்கள் இல்லை என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button