மே 17 இயக்கம் மியா கலீஃபா வாழ்க எனப் பேரணி சென்றதாக ஃபோட்டோஷாப் வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கே.முனுசாமி என்பவரின் முகநூல் பக்கத்தில், ” மே 17 இயக்கத்தினர் நடத்திய பேரணியில் பெண்கள் கொண்டு செல்லப்பட்ட பேனரில் ” வாழ்க மியா கலீஃபா வளர்க சன்னி லியோன் ” என்ற வாசகமும், புகைப்படமும் இடம்பெற்றதாக புகைப்படம் பதிவிடப்பட்டது. இப்புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.
இப்புகைப்படத்தில், மியா கலீஃபா, சன்னி லியோன் பெயருடன் ஆபாச வலைதளத்தை தடை செய்யக்கூடாது என்றும், அம்பேத்கரின் புகைப்படத்தை ஏந்தி இருப்பதையும் காண முடிகிறது. ஆக, இது வேண்டுமென்றே எடிட் செய்து தவறாக பரப்பப்பட்டு வரும் புகைப்படம் என புரிந்து கொள்ள முடிந்தது.
மே 17 இயக்கம் அம்பேத்கர் பேரணி குறித்து தேடுகையில், கடந்த ஆண்டு கோவையில் நடந்த நீலச்சட்டை பேரணி தொடர்பான செய்திகள் கிடைத்தன. இதையடுத்து, மே 17 இயக்கத்தின் இணையதளத்திற்கு சென்று ” நீலச்சட்டை பேரணி ” எனத் தேடுகையில், 2020 பிப்ரவரி மாதம் “நீலச்சட்டைப் பேரணி & சாதி ஒழிப்பு மாநாட்டில் மே பதினேழு இயக்கம்” எனும் தலைப்பில் வெளியான புகைப்பட தொகுப்பில் உண்மையான புகைப்படம் கிடைத்தது.
மே 17 இயக்கத்தினரின் பேனரில் ” சனாதன காவி ஒழியட்டும் ! சமத்துவ நீலம் பரவட்டும் ! ” என்கிற வாசகம் இடம்பெற்று இருக்கிறது. அதில், மியா கலீஃபா, சன்னி லியோன் மற்றும் ஆபாச தளம் குறித்து எடிட்டு செய்து தவறாகப் பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : காங்கிரஸ் தொண்டர்கள் மியா கலீஃபா படத்துக்கு கேக் ஊட்டுவதாக ஃபோட்டோஷாப்!
இதற்கு முன்பாக, காங்கிரஸ் கட்சியினர் மியா கலீஃபா பேனருக்கு கேக் ஊட்டியதாக போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை இந்திய அளவில் வைரல் செய்தனர்.
முடிவு :
நம் தேடலில், 2020-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற நீலச்சட்டை பேரணியில் மே 17 இயக்கத்தின் சார்பில் கொண்டு செல்லப்பட்ட பேனரில் மியா கலீஃபா, சன்னி லியோன் வாசகம் மற்றும் புகைப்படத்தை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.