பழனிச்சாமி மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் என மயில்சாமி கூறினாரா ?

பரவிய செய்தி
கொடநாடு கொலை வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி – நடிகர் மயில்சாமி
மதிப்பீடு
விளக்கம்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் இருந்து விலகிய நகைச்சுவை நடிகர் மயில்சாமி சட்டப்பேரவை தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இந்நிலையில், ” கொடநாடு கொலை வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி ” என மயில்சாமி கூறியதாக ABP நாடு உடைய நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
ABP நாடு செய்தி சேனலின் முகநூல் பக்கத்தை தேடிப் பார்க்கையில், மயில்சாமி குறித்த நியூஸ் கார்டு ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து ABP நாடு சேனலின் ஆசிரியர் மனோஜ் அவர்களிடம் பேசுகையில், ” இது போலியானது, நாங்கள் வெளியிடவில்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.
ABP நாடு முகநூல் பக்கத்தில் செப்டம்பர் 22-ம் தேதி, ” விரைவில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும். அனைவரும் தயாராக இருக்க வேண்டும் – அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ” என வெளியான நியூஸ் கார்டில் எடிட் செய்து போலிச் செய்தியை பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், கொடநாடு கொலை வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி என நடிகர் மயில்சாமி கூறியதாக பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.