This article is from Oct 16, 2018

METOO தொடங்கியது ஏன்?தொடங்கியவர் யார்?

பரவிய செய்தி

உலகம் முழுவதிலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுபவர்களை பேச வைக்க, 2006 -ல் முதன் முதலில் “ ME TOO “ பிரச்சாரத்தை தொடங்கியவர் ஆப்ரிக்கா- அமெரிக்கரான “ தரனா புர்க்கே “ என்பவர் தான்.

மதிப்பீடு

சுருக்கம்

பாலியல் துன்புறுத்தல், பாலியல் தாக்குதலால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ தரனா புர்க்கே 2006-ல் “ JUST BE INC “ என்னும் தன்னார்வு அமைப்பை உருவாக்கினார். “ ME TOO “ எனும் ஹஷ்டாக் மூலம் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியான தாக்குதலை பேச வைப்பதற்காக பிரச்சாரத்தை மேற்கொண்டவர்.

விளக்கம்

1997 ஆம் ஆண்டு 13 வயதுடைய பெண் தனக்கு நிகழ்ந்த பாலியல் தாக்குதல் பற்றிய அனுபவத்தை கூறிய போது தரனா புர்க்கே பேச முடியாமல் உறைந்தார். அத்தருணமே ME TOO பிரச்சாரம் பிறந்தது. எனினும், அந்நேரத்தில் அப்பெண்ணுக்கு எப்படி உதவுவது அல்லது ME TOO என்ற வார்த்தை கூட அன்று அவர் கூறவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் உரையாடல் நிகழ்ந்த 10 வருடங்களுக்கு பிறகு 2006-ல் “ JUST BE INC “ என்னும் தன்னார்வு அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் பாலியல் துன்புறுத்தல், பாலியல் தாக்குதலால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ நினைத்தார். ஆனால், பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு ஆதரவான ஆதாரங்கள் ஏதும் அவர் நினைத்தது போன்று கிடைக்கவில்லை.

ஆகையால், தன் இயக்கத்திற்கு “ ME TOO “ என பெயரிட்டார். தரனா புர்க்கேவின் முயற்சிக்கு நீண்ட காலம் யாரும் ஆதரவும் அளிக்கவில்லை. ஒருநாள்  இந்த இரு வார்த்தைகள் சோசியல் மீடியாவில் #metoo தீயாய் பரவியது. இந்த வார்த்தையை பெரிதாகப் பரவ செய்தது ஹாலிவுட் நடிகை அல்ய்சா மிலானோ. ஹாலிவுட் தயாரிப்பாளர் அளித்த பாலியல் தொல்லை காரணமாக மிலானோ அதற்கு எதிராக பேசியதன் விளைவால் மிகவும் பிரபலமடைந்தது ME TOO.

பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் பற்றி வெளி உலகில் பேச வேண்டும் என “ ME TOO “ பிரசாரத்தின் மூலம் தரனா புர்க்கே கூறி வருகிறார்.

“ ME TOO “ இன்று உலகம் முழுதும் பெண்கள் பேசும் வார்த்தையாக உருமாறி வருகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader