மாத்திரை அட்டையில் சிவப்பு நிறக் கோடு எதைக் குறிக்கிறது ?

பரவிய செய்தி

மாத்திரை அட்டையில் சிவப்பு கோடு இருந்தால் அந்த மாத்திரையை டாக்டர் பரிந்துரை இல்லாமல் சாப்பிடக்கூடாது என்று அர்த்தம். கவனத்தில் வையுங்கள், அனைவருக்கும் பகிருங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

இந்தியாவில் ஆன்டிபயோடிக் மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தீவிர நோய்களுக்கும் மருத்துவரின் பரிந்துரை இன்றி ஆன்டிபயோடிக் மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றனர். இதனை குறைக்கும் நோக்கமாகவும், விழிப்புணர்வுக்கும் மாத்திரையின் பின்புறம் சிவப்பு கோடுகள் இடம்பெற்றுகின்றன.

விளக்கம்

இந்தியாவில் வியாதிகளுக்கு பஞ்சமில்லை. அதனைச் சார்ந்த மருந்து, மாத்திரைகளின் விற்பனையும் பன்மடங்கு அதிகம். இதில், சாதாரண காய்ச்சல், இருமல் தொடங்கி கடுமையான பாதிப்பை அளிக்கும் நோய்களுக்கும் கூட மருந்துவரின் பரிந்துரையின்றி ஆன்டிபயோடிக் மருந்துகளைப் பயன்படுத்தியும் வருவதுண்டு.

சிவப்பு நிறக் கோடு :

நன்கு படித்தவர்கள் கூட மருந்துகளின் விளைவுகள் பற்றிய பகுத்தறிவு இன்றி ஆன்டிபயோடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்துக்கின்றனர். விற்பனை செய்யப்படும் சில ஆன்டிபயோடிக் மருந்துகளின் பின்புறத்தில் சிவப்பு நிறத்தில் கோடுகள் இருப்பதைக் காண முடிந்தால் அது எதனைக் குறிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தேவையற்ற மருந்துகளின் பயன்பாடுகளை மற்றும் டிபி, மலேரியா, சிறுநீரக பாதை தொற்று போன்ற பல தீவிர நோய்களுக்கும் கூட ஆன்டிபயோடிக் மருந்துகள் விற்பனை நிலையங்களில் நடைபெறும் அதிகளவிலான விற்பனையைக் கண்டிப்பதே சிவப்பு நிறக் கோட்டின் நோக்கமாகும்

 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மாத்திரை அட்டைகளில் சிவப்பு நிறம் இடம்பெறுவதை சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி வைத்தனர். இதற்காக “ Medicine with red line “ எனும் ஆன்டிபயோடிக் மாத்திரைகளின் தேவையற்ற பயன்பாடு தொடர்பான பகுத்தறிவை பரவச் செய்ய விழிப்புணர்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியது மத்திய அரசு.

காசநோய் பாதிப்பில் உலகளவில் அதிக அளவிலான நோய் பாதித்தவர்களைக் கொண்ட நாடு இந்தியா. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக  23 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதிக வருமானம் அளிக்கும், விலை குறைவு, ஒரு முறையற்ற தொடர்ச்சியான விற்பனை மற்றும் எளிய மக்களின் வாழ்க்கையில் மருத்துவமனை செல்ல இயலாமை போன்றவற்றால் ஆன்டிபயோடிக் பயன்பாடு அதிகரிக்கிறது.

2014 ஆகஸ்ட்டில் வெளியான “ The lancet infectious diseases “  என்ற பத்திரிகை அறிக்கையில், 2010 வரையில் இந்தியாவில் 13 பில்லியன் யூனிட்ஸ் ஆன்டிபயோடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இது உலகிலேயே அதிக எண்ணிக்கை எனவும் குறிப்பிட்டனர். 2005 முதல் 2009 ஆம் ஆண்டில் 40 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

தீவிரமான நோய்களுக்கு விற்பனை நிலையங்களில் கிடைக்கும் ஆன்டிபயோடிக் மருந்துகளை சார்ந்து இருக்காமல், மருத்துவரை அணுகுங்கள். சிவப்பு நிறக் கோடு இடம்பெற்ற மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி பயன்படுத்த வேண்டாம். சமூக வலைத்தளங்களில் நோய் சிகிச்சைக்கான மருந்து என பரவும் செய்திகளையும் நம்ப வேண்டாம்.

Please complete the required fields.
ஆதாரம்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close