மெஹந்தியில் UPI QR குறியீடு மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ !

பரவிய செய்தி
இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி !!! இப்போது நீங்கள் மெஹந்தி வடிவமைப்பில் UPI QR குறியீட்டைப் பார்க்கலாம்.
மதிப்பீடு
விளக்கம்
இந்திய பண பரிவர்த்தனை முறைகளில் அதிவேக வளர்ச்சியடைந்து வரும் UPI (Unified Payments Interface) பண பரிவர்த்தனையானது, வருகின்ற 2026-27 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 100 கோடி பண பரிவர்த்தனைகளை எட்டும் என PwC அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 2022-23 நிதியாண்டில் 103 பில்லியனாக இருந்துள்ள பரிவர்த்தனைகள், வருகின்ற 2026-27 நிதியாண்டில் 411 பில்லியன் பரிவர்த்தனைகளாக அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்நிலையில் பெண் ஒருவரின் கையில் மெஹந்தியால் QR குறியீடு வரையப்பட்டு, பின்னர் அந்த QR குறியீட்டைப் பயன்படுத்தி, UPI பண பரிவர்த்தனை செய்வது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
This is Peak Digital India Moment 😂🇮🇳🚀 pic.twitter.com/ciuVuObxcQ
— Ravisutanjani (@Ravisutanjani) August 29, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததன் மூலம், இந்த வீடியோவை பதிவு செய்தவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கண்டுபிடித்தோம்.

