This article is from Jun 15, 2018

தோனியின் கேப்டன்ஷிப் வழியை பின்பற்றுவேன் என மெஸ்ஸி கூறினாரா ?

பரவிய செய்தி

உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி கேப்டன்ஷிப்பில் இந்தியக் கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் அணுகுமுறையை பின்பற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு

விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியை சிறந்த அணியாக மாற்றி பல வெற்றிகளை தேடித் தந்தவர் கேப்டன் மகேந்திரசிங் தோனி. இன்று கேப்டன் பதவியில் இல்லையென்றாலும் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் என்றால் தோனி என்றே பலரும் பெருமையாக கூறுவர். உலகக்கோப்பை உள்ளிட்ட பல தொடர்களில் வெற்றிப் பெற்று அணியை சிறப்பாக வழிநடத்தி வந்த எம்.எஸ்.தோனி சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று பல குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து கேப்டன் பதவியை துறந்தார்.

இந்திய அணியின் கேப்டன் பதவியில் இல்லையென்றாலும் 2  ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி கோப்பையை வென்று தன் திறமையை மீண்டும் நிரூபித்தார். இதற்கிடையில், கேப்டன்ஷிப்பில் மகேந்திரசிங் தோனியின் அணுகுமுறையை பின்பற்றப் போவதாக கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி வெளிப்படையாக தெரிவித்ததாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களிலும், இணையப் பக்கங்களிலும் வைரலாகி வருகிறது.

உலகில் கால்பந்தாட்டம் பற்றி நன்கு அறிந்தவர்கள் அல்லது சிறிதளவே தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் மிகவும் பிடித்தமான வீரராக இருப்பவர் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி. கால்பந்து விளையாட்டில் ஜாம்பவனாக இருக்கும் 31 வயதான மெஸ்ஸி லா லிகா அணி, பார்சிலோனா, அர்ஜென்டினா ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார். பல சாம்பியன்ஸ் லீக் மற்றும் கிளப் உலகக்கோப்பையை வென்றுள்ளார் மெஸ்ஸி.

2018 ஆம் ஆண்டு FIFA உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ள மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பற்றி சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த மெஸ்ஸி தங்கள் அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று கூறியுள்ளார். விளையாட்டில் அமைதியான அணுகுமுறையை கையாளப்போவதாக தெரிவித்தார்

ரஷ்யாவில் நடக்க உள்ள உலகக்கோப்பை போட்டியில் ரசிகர்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும். ரஷ்யா செல்லும் அர்ஜென்டினா அணி மக்களுக்கு பிடிக்காத அணியாக இருக்கப் போவதில்லை என மக்கள் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால், நாங்கள் சிறந்த வீரர்களை கொண்ட குழு, நாங்கள் அவர்களை துண்டுகளாக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“ நான் நம்புகிறேன், நான் இந்த அணியில் நம்பிக்கை வைத்து இருக்கிறேன் ”

“ திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களை நாங்கள் கொண்டு உள்ளோம். நாங்கள் தான் சிறந்தவர்கள் என்ற செய்தியை அனுப்ப இயலாது, ஏனெனில் அது உண்மை இல்லை “ என்று கூறியுள்ளார். ஜூன் 21 மற்றும் 26-ம் தேதிகளில் நடக்க உள்ள குரோஷியா மற்றும் நைஜீரியா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவதாகவும் தெரிவித்தார்.

உலகக்கோப்பை போட்டிகள் குறித்து பல கருத்துகளை பகிர்ந்துக் கொண்ட மெஸ்ஸி ஒரு இடத்தில் கூட எம்.எஸ்.தோனி பற்றி கூறவில்லை. மெஸ்ஸி அளித்த பேட்டிப் பற்றி வெளியான எந்த செய்தியிலும் தோனி பற்றி இடம்பெறவில்லை. தனது அணியின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளதாகவும், சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி கோப்பையை வெல்வோம் என்றும் அமைதியான அணுகுமுறையில் விளையாடப்போவதாகவும் கூறினார். எம்.எஸ்.தோனியின் கேப்டன்ஷிப் பற்றிய கருத்துகளையும் வெளிப்படுத்தவில்லை என்பதே உண்மை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader