மேட்டூர் அருகே குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்ததாக பழைய வீடியோவை வெளியிட்ட ஜூனியர் விகடன் !

பரவிய செய்தி

மேட்டூர் அருகே தங்கமாபுரி பட்டினத்தில் குடியிருப்புக்குள் காவிரி ஆற்று வெள்ளம் புகுந்தது! ஆபத்தான நிலையில் சிக்கித் தவிக்கும் மக்கள் !

மதிப்பீடு

விளக்கம்

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்நிலையில், ” மேட்டூர் அருகே தங்கமாபுரி பட்டினத்தில் குடியிருப்புக்குள் காவிரி ஆற்று வெள்ளம் புகுந்ததால் ஆபத்தான நிலையில் சிக்கித் தவிக்கும் மக்கள் ” என ஜூனியர் விகடன் பழைய வீடியோ ஒன்றை செய்தியாக வெளியிட்டு உள்ளது.

உண்மை என்ன ? 

மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரி பட்டினத்தில் குடியிருப்புக்குள் சூழந்த வெள்ளம் என ஜூனியர் விகடன் வெளியிட்ட வீடியோ, “கடந்த 2021-ம் தேதி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டபள்ளி எனும் கிராமத்தில் குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்த போது எடுக்கப்பட்டது ” என அறிய முடிந்தது.

ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை மேட்டூர் அருகே என தவறாக வெளியிட்ட ஜூனியர் விகடன், பின்னர் அந்த பதிவை நீக்கி இருக்கிறது. எனினும், ஜூனியர் விகடனின் செய்தி வீடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள் .

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர், பவானி உள்ளிட்ட பல இடங்களில் கரையோர குடியிருப்பு பகுதிகளுக்குள் மற்றும் விளைநிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து உள்ளதாக நேரடி செய்திகள் சிலவும் வெளியாகி உள்ளன.

முடிவு : 

நம் தேடலில், மேட்டூர் அருகே தங்கமாபுரி பட்டினத்தில் குடியிருப்புக்குள் காவிரி ஆற்று வெள்ளம் புகுந்தது, ஆபத்தான நிலையில் சிக்கித் தவிக்கும் மக்கள் என ஜூனியர் விகடன் பதிவிட்ட செய்தி தவறானது. அந்த வீடியோ கடந்த ஆண்டு ஆந்திரா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader