MGM நிறுவன லோகோவில் கர்ஜிக்கும் சிங்கத்தின் பின்புற தோற்றம்| உண்மை என்ன ?

பரவிய செய்தி
Metro Goldwyn Mayer என்ற நிறுவனத்தின் லோகோவில் கர்ஜிக்கும் சிங்கத்தின் முன்பக்க காட்சி, பின்பக்க காட்சி.
மதிப்பீடு
விளக்கம்
Metro Goldwyn Mayer என்ற அனிமேஷன் ஸ்டுடீயோ நிறுவனம் தயாரித்த பல கார்ட்டூன் தொடர்கள் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, Tom and Jerry உள்ளிட்ட மிகப் பிரபலமான கார்ட்டூன் தொடர்களை இந்நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
கார்ட்டூன் தொடர் ஆரம்பிக்கும் பொழுது Metro Goldwyn Mayer ஸ்டுடீயோவின் லோகோ முதலில் காண்பிக்கப்படும். அதில், ஒரு வட்டத்திற்குள் கர்ஜிக்கும் சிங்கத்தின் உருவம் இடம்பெற்று இருக்கும். சிங்கம் கர்ஜிக்கும் காட்சி பிரபலமானதும் கூட.
Backend y Frontend, definición gráfica. pic.twitter.com/xI2gWxNZ5t
— Postureo StartUp (@PostureoStartUp) June 9, 2015
லோகோவில் சிங்கம் கர்ஜிக்கும் காட்சியை படமாக்கும் நிகழ்வு எப்படி நிகழ்த்து இருக்கும் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருந்து இருக்கும். அப்படி ஆர்வமாய் இருக்கும் தருணத்தில் MGM நிறுவன லோகோவில் சிங்கம் கர்ஜிக்கும் காட்சியின் முன்புறம் மற்றும் பின்புறம் என இரு படங்கள் மீம்களாக நீண்டகாலமாக வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
சிங்கத்தினை ஸ்கேன்னிங் மெஷின் போன்று இருக்கும் ஒரு இயந்திரத்தில் படுக்க வைத்து கை, கால்கள் கட்டப்பட்டு இருக்கும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம். அதில், 2015-ல் Business insider தளத்தில் வெளியான செய்தி கிடைத்தது.
2005-ல் வட ஆப்பிரிக்காவில் 2 வயது சாம்சன் என்ற சிங்கத்திற்கு ஏற்பட்ட உடல் நலக்கோளாறு காரணமாக CT ஸ்கேன் என அனைவராலும் பெரிதும் அறியப்பட்ட CAT (Computerized Axial Tomography scan) ஸ்கேன் இயந்திரத்தில் வைத்து இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே வைரலாகி இருந்தது.
வைரலாகும் புகைப்படத்தையும், 2005-ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒற்றுமைப்படுத்தி பார்க்கும் பொழுதே அறிந்து கொள்ள முடிகிறது போட்டோஷாப் முறையில் ஸ்கேன் மெஷின் மீது Metro Goldwyn Mayer-யின் பெயரை பின்பக்கம் போன்று எழுதி இருக்கிறர்கள்.
Logodesignlove என்ற இணையதளத்தில் Metro Goldwyn Mayer ஸ்டுடீயோவின் லோகோ 1917 முதல் 2008 வரையில் எப்படி மாறியுள்ளது என்பது தொடர்பான “The history of the MGM lions ” எனும் கட்டுரையில் புகைப்படங்களையும், சிங்கத்தின் காட்சி எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியிட்டு இருந்தனர்.
முடிவு :
நம்முடைய தேடலில், உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக ஸ்கேன் மெஷினில் வைக்கப்பட்டு இருக்கும் சிங்கத்தின் புகைப்படத்தை போட்டோஷாப் முறையில் மாற்றி Metro Goldwyn Mayer ஸ்டுடீயோவின் லோகோவில் கர்ஜிக்கும் சிங்கம் என்ற தவறான தகவலை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றனர் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.