மைக்கேல் ஜாக்சன் அல்லாஹ்வின் நாமத்தை பாடியதாக பரவும் டப்பிங் வீடியோ !

பரவிய செய்தி

அல்லாஹ்வின் திருநாமங்களை மைக்கல் ஜாக்சன் உச்சரிக்கும் விதம் நம் எத்தனைபேர் கேட்டிருப்போம்?

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

உலக புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சன் ” அல்லாஹ்வின் திருநாமங்களை ” உச்சரிக்கும் விதத்தைப் பாருங்கள் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மைக்கேல் ஜாக்சன் நிகழ்ச்சியை ரசிக்கும் 2 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த வீடியோ குறித்து பதிவிடுமாறு வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. இதுகுறித்து தேடும் போது கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சமூக வலைதளங்களில் இவ்வீடியோ பகிரப்பட்டு வருவதை பார்க்க முடிந்தது.

உண்மை என்ன ?

மைக்கேல் ஜாக்சன் அல்லாஹ்வின் நாமத்தை உச்சரித்து பாடியதாக வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடிய போது, ” Give Thanks to Allah ” எனும் தலைப்பில் மைக்கேல் ஜாக்சனின் இவ்வீடியோ உலக அளவில் வைரலாகி இருக்கிறது. ஆனால், அது உண்மையான வீடியோ அல்ல.

Advertisement

” 1993-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பில் கிளிண்டனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்சன் ” Gone to soon ” மற்றும் ” Heal the world ” எனும் பாடல் நிகழ்ச்சியை நிகழ்த்தினார். அந்த வீடியோவில் தென் ஆப்பிரிக்கா பாடகர் சாயின் பீகா பாடிய பாடலை இணைக்கப்பட்டு உள்ளது ” என thenews இணையதளம் 2018-ல் வெளியிட்டு இருக்கிறது.

1993-ல் பில் கிளிண்டன் முன்னிலையில் மைக்கேல் ஜாக்சன் நடத்திய ” Gone to soon ” மற்றும் ” Heal the world ” நிகழ்ச்சியின் உண்மையான வீடியோவில் 53-வது நொடிகளில் இருந்தே வைரல் செய்யப்படும் காட்சி எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த பகுதியில் உண்மையாக இடம்பெற்றதை வீடியோவில் கேட்கலாம்.

முடிவு :

நம் தேடலில், மைக்கேல் ஜாக்சன் அல்லாஹ்வின் திருநாமங்களை உச்சரிக்கும் விதம் என வைரல் செய்யப்படும் வீடியோ டப்பிங் செய்யப்பட்ட போலியான வீடியோ என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button