பாலுடன் இருமல் மருந்தை கலந்து கொடுத்ததால் குழந்தை மரணமா ?

பரவிய செய்தி

பாலுடன் காஃப் சிரப் மருந்தை கலந்து கொடுக்க வேண்டாம். இரண்டையும் கலப்பதால் விஷமாக மாறுகிறது. இதனை அறியாமல் ஒரு தாய் தன் குழந்தைக்கு இரண்டையும் கலந்து கொடுத்ததன் விளைவாக நான்கு குழந்தை இறந்துள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

பால் மற்றும் இருமல் மருந்து (காஃப் சிரப்) இரண்டையும் கலந்து கொடுப்பதன் மூலம் மருந்தின் ஈடுபாடு குறையவும், உடலானது மருந்தினை ஏற்றுக் கொள்ளுதல் குறையவும் வாய்ப்புள்ளது. ஆனால், விஷமாக மாறும், இதனால் குழந்தைகள் இறந்ததாக தகவல்களில் உண்மை இல்லை.

விளக்கம்

சமூக வலைத்தளங்களில் நாம் அதிகம் பயன்படுத்தக்கூடிய மருந்துகள் குறித்த எச்சரிக்கை பதிவுகளை காண முடியும். இப்படியான பதிவுகளால் மக்கள் தாம் பயன்படுத்தும் மருந்துகள் ஆபத்தை விளைவிக்குமா என அச்சம் அடைந்து விடுகின்றனர்.

Advertisement

சமீபத்தில் பால் மற்றும் காஃப் சிரப் எனும் இருமல் மருந்தினை பற்றிய எச்சரிக்கை செய்தி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில்,

Important message! Must Read Carefully!
  Warning:

  A mother killed her 4 children, accidentally. The children refused to drink cough syrup. So she mixed the syrup in milk. The children Went to sleep after drinking the milk and never got up. After examining the clinical trials, all 4 of them were found dead in the bed, The mixture of cough syrup and milk proved to be poisonous. The mother said that she killed the children with her own hand. she is Psychologically disturbed. Avoid drinking medicine in the milk.

* Not only cough syrup *,
* Do not drink any chemical additives in milk *
* It will become poisonous *
* So do not do that * 

இந்த ஃபார்வர்டு செய்தியில் ஒரு தாய் தன் நான்கு குழந்தைகளுக்கு பாலுடன் காஃப் சிரப் மருந்தினை கலந்து கொடுத்த காரணத்தினால் குழந்தைகள் இறந்து உள்ளதாகவும், இரண்டையும் கலந்தால் விஷமாக மாறும் எனவும் எச்சரிக்கை செய்து உள்ளனர்.

Advertisement

பால் மற்றும் காஃப் சிரப் :

பால் மற்றும் இருமல் மருந்தான காஃப் சிரப் ஆகியவற்றை கலந்து குடிப்பதன் மூலம் இருமல் தொடர்பான கோளாறுகள் மற்றும் உடலானது மருந்தினை ஏற்றுக் கொள்வதை தடுப்பதாக குழந்தை நல மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். ஆகையால், பாலுடன் இருமல் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

பாலுடன் காஃப் சிரப் எடுத்துக் கொள்ளும் பொழுது உடல் மருந்தினை ஏற்றுக் கொள்வது தடுக்கப்படுவதால் காஃப் சிரப் மருந்தினை பாலுடன் எடுத்துக் கொள்வது சரியானதாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர, பாலுடன் காஃப் சிரப் மருந்தினை கலந்தால் விஷமாக மாறும் என கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை.

Drug Interaction With Milk and The Relevance of Acidifying/Alkalizing Nature of Food ” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் பால் மற்றும் காஃப் சிரப் கலந்து குடிப்பது குறித்த ஆய்வு தகவலை முடிவாக வெளியிட்டு உள்ளனர்.

சில மருந்துகள் பாலுடன் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றன. எனினும், சில மருந்துகளை பாலுடன் எடுத்துக் கொள்ள வேண்டாம் என பரிந்துரை செய்யப்படுகிறது. எனவே, மருத்துவர்கள் அளிக்கும் ஆலோசனைகள் மூலமாகவும் மற்றும் ஒருவேளை சந்தேகங்கள் இருந்தால் மருந்துகள் விற்பனை நிலையத்தில் விவரங்கள் கேட்டு பயன்படுத்தவும்.

குழந்தைகள் இறப்பு :

எச்சரிக்கை என பரவிய ஃபார்வர்டு செய்தியில் கூறுவதை போன்று பாலுடன் காஃப் சிரப் குடித்து குழந்தைகள் மரணம் குறித்த செய்திகள் எங்கும் இடம்பெறவில்லை. குழந்தைகள் இறந்தனர் எனக் கூறுவதற்கு நம்பத்தகுந்த செய்திகள் இல்லை என்பதே உண்மை.

முடிவு :

பாலுடன் காஃப் சிரப்-ஐ ஏன் கலந்து குடிக்க கூடாது என மேலே விவரித்து உள்ளோம். அதைத் தவிர்த்து விஷமாக மாறி குழந்தைகள் இறந்தனர் எனக் கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை என்பதால் பரவும் செய்தி வதந்தியே !

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close