பொய் செய்தி பரப்பிய பாஜகவினர்.. திட்டித்தீர்த்த அமைச்சர் பி.டி.ஆர் !

பரவிய செய்தி

எனது கொளுந்தியா மக்கள் பூப்புனித நீராட்டு விழாவில் நான் பங்கேற்க இருப்பதால் டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை – மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனது கொழுந்தியா மகள் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்க இருப்பதால் டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை எனக் கூறியதாக நியூஸ் 7 தமிழ் உடைய நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

உண்மை என்ன ?

செப்டம்பர் 17-ம் தேதி நியூஸ் 7 தமிழ் செய்தியில், ” தாமதமாக அழைப்பு வந்ததால் டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை – மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் ” என்றே வெளியாகி இருக்கிறது.

 

Facebook link  

Advertisement

மேற்காணும் நியூஸ் கார்டில் எடிட் செய்து சமூக வலைதளங்களில் தவறாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது என நியூஸ் 7 தமிழும் தெரிவித்து இருக்கிறது.

இதற்கிடையில், தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த செளதா மணி என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் வைரலாகும் போலியான நியூஸ் 7 தமிழ் செய்தி பகிரப்பட்டு இருக்கிறது. அதைப் பகிர்ந்த அமைச்சர் பி.டி.ஆர், ” வடிகட்டிய முட்டாள்தனம். கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில் எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும் பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா ” எனத் திட்டி பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link 

முடிவு : 

நம் தேடலில், எனது கொழுந்தியா மகள் பூப்புனித நீராட்டு விழாவில் நான் பங்கேற்க இருப்பதால் டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்க அளித்ததாக பரப்பப்படும் நியூஸ் 7 தமிழ் சேனலின் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button