அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மார்வாடிகளை உயர்த்தி கருத்து கூறினாரா ?

பரவிய செய்தி
மார்வாடிகள் மட்டும் இல்லையென்றால் பல தமிழர்கள் பிச்சை எடுக்கும் நிலை வரும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
மதிப்பீடு
விளக்கம்
தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் மார்வாடிகளுக்கு ஆதரவாகவும், தமிழர்களை இழிவுப்படுத்தியும் கருத்து ஒன்றை வெளியிட்டதாக தந்தி டிவி நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மார்வாடிகள் மற்றும் தமிழர்களை இணைத்து சர்ச்சையான கருத்தை தெரிவித்து இருந்தாரா என்பதை தேடி பார்த்தோம். தந்தி டிவி செய்தியில் பிப்ரவரி 29-ம் தேதி வெளியான செய்திகளை தேடிய பொழுது, ” அதிமுக-திமுக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றால் கமல்ஹாசன் வேறு நாட்டிற்கு தான் செல்ல வேண்டும் ” என தெரிவித்ததாக நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.
நடிகர் கமலின் அரசியல் கூட்டணி குறித்து விமர்சித்து கூறிய செய்தியில் ” மார்வாடிகள் மற்றும் தமிழர்கள் ” குறித்து தவறான கருத்தை ஃபோட்டோஷாப் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.
சமீப காலமாகவே அதிக அளவில் செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டில் சர்ச்சையான கருத்துகளை அரசியல்வாதிகள், நடிகர்கள் கூறியதாக ஃபோட்டோஷாப் செய்தி பரப்பி வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
முடிவு :
நமது தேடலில் இருந்து, மார்வாடிகள் மட்டும் இல்லையென்றால் பல தமிழர்கள் பிச்சை எடுக்கும் நிலை வரும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என உறுதியாகி உள்ளது.