தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு அதிகம் என ராஜேந்திர பாலாஜி கூறியதாக போலிச் செய்தி!

பரவிய செய்தி
தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்குதான் அதிகமாக இருக்கிறது. எஸ்.வி சேகரை சந்தித்துவிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி பேட்டி.
மதிப்பீடு
விளக்கம்
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்குதான் அதிகமாக இருக்கிறது என எஸ்.வி சேகரை சந்தித்த பின் பேட்டி அளித்ததாக நியூஸ்7 தமிழ் செய்தியின் ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று ட்விட்டர், முகநூல் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது.
Only Bhramins have power to rule Tamil Nadu. தமிழகத்தை ஆளும் தகுதி பிராமிணர்களுக்கு மட்டுமே உள்ளது. Statement from Ruling party MLA #RajendraBalaji@AIADMKOfficial @CMOTamilNadu@sumanthraman @RKRadhakrishn @rajakumaari @mkstalin @thirumaofficial @kavita_krishnan @ambedkariteIND pic.twitter.com/SqL9gieNuf
— shakirudeen farook (@Farookfar) January 10, 2021
தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு மட்டுமே உள்ளது – ஹட்ச் டாக்
யாருயா சொன்னது
எஸ்.வி.சேகர் வீட்ல பேசிக்கிட்டாங்கபா… pic.twitter.com/9YFcvt7Hfo
Advertisement— முகமூடி (@Mugamoodi_1) January 10, 2021
உண்மை என்ன ?
” தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்குதான் அதிகமாக இருக்கிறது ” என ராஜேந்திர பாலாஜி கூறியதாக ஏதும் செய்தி இருக்கிறதா என நியூஸ்7 தமிழ் முகநூல் பக்கத்தை ஆராய்கையில் அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை.
ஸ்க்ரீன்ஷார்ட்டில் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், எஸ்.வி சேகர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஜனவரி 9-ம் தேதி ” என் நண்பர் நெல்லை வசந்தன் மூலமாக எதிர்பாராத இனிய சந்திப்பு ” என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
UNEXPECTED NICE MEETING WITH HONORABLE MINISTER RAJENDRA BALAJI. 🇮🇳என் நண்பர் நெல்லை வசந்தன் மூலமாக எதிர்பாராத இனிய சந்திப்பு pic.twitter.com/3MiCGrC1Oj
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) January 9, 2021
வைரலாகும் நியூஸ்7 தமிழ் ஸ்க்ரீன்ஷார்ட் குறித்து எஸ்.வி.சேகரை தொடர்பு கொண்டு பேசிய போது, ” அவர் என்னிடம் அப்படி ஏதும் கூறவில்லை. இப்படியெல்லாம் பேசவும் மாட்டார்கள் ” எனப் பதில் அளித்து இருந்தார்.
செய்தி நிறுவனங்களின் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்களில் நிறுவனத்தின் லோகோ இல்லாமல் செய்தி வெளியிடுவதில்லை. வைரலாகும் ஸ்க்ரீன்ஷார்ட்டில் அப்படி எந்த லோகோவும் இல்லை.
தமிழகத் தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என இரு கட்சியைச் சேர்ந்வர்களும் பேட்டி அளித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு குறிப்பிட் சமுகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தை ஆள்வது குறித்து பேச சிறிதும் வாய்ப்பில்லை. இது வாக்கு வங்கியை பாதிக்கும். தேர்தல் நேரத்தில் போலியான செய்தியை எடிட் செய்து வைரல் செய்வதை நாம் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.
முடிவு :
நம் தேடலில், தமிழக பால் வளத்துறை அமைச்சர் உடன் எஸ்.வி சேகர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து எடிட் செய்யப்பட்ட போலியான செய்தியை பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.