ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேபரே டான்சராக இருந்ததாக எடிட் செய்து தவறாக பரப்பப்படும் புகைப்படம் !

பரவிய செய்தி

இன்று வாய் கிழிய கலாச்சார பாடம் எடுக்கும் இந்த கேபரே டான்சர் யார் தெரியுதா நண்பர்களே ?

மதிப்பீடு

விளக்கம்

பதான் திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினி உடை அணிந்ததற்கு பாஜக மற்றும் வலதுசாரிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து, பதான் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று ட்ரெண்ட் செய்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜகவில் அமைச்சராக உள்ள ஸ்மிருதி இரானி 1998ல் பெமினா மிஸ் இந்தியா நிகழ்ச்சியில் காவி நிற மார்டன் உடையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பாரில் கேபரே டான்சராக இருந்ததாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ட்ரிப் அட்வைசர் எனும் சுற்றுலா தொடர்பான இணையதளத்தில் ” துருக்கி இரவு நேர உணவு விடுதியில் பெல்லி டான்சர் ” என்ற தலைப்பில் இப்புகைப்படம் கிடைத்தது.

மேற்காணும் புகைப்படத்தில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் முகத்தை எடிட் செய்து, கருப்பு வெள்ளை படமாக மாற்றி போலியான படத்தை சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பி வருகிறார்கள்.

மேலும் படிக்க : சமூக வலைதளத்தில் இளம் பருவ சோனியா காந்தி என தவறான படங்கள் !

மேலும் படிக்க : சோனியா காந்தியின் டான்ஸ் என தவறாக பரப்பப்படும் புகைப்படம் !

இதற்கு முன்பாக, முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி டான்ஸ் ஆடிய புகைப்படம், நீச்சல் உடையில் இருந்த புகைப்படம் எனக் கூறி எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்பட்டன.

முடிவு : 

நம் தேடலில், ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேபரே டான்சராக இருந்ததாக பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader