உக்ரைன் அழகி துப்பாகியுடன் போரில் களமிறங்கியதாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

பரவிய செய்தி

தாய் நாட்டை காக்க ரஷ்யாவுக்கு எதிரான போரில் கலந்துகொள்ளும் உக்ரைன் மிஸ் கிராண்ட் பட்டம் வென்ற அனஸ்டாசியா லென்னா.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

உக்ரைன் நாட்டில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராக மக்கள் போரிட வருமாறு அந்நாட்டு அதிபர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், 2015-ல் உக்ரைன் மிஸ் கிராண்ட் பட்டம் வென்ற அனஸ்டாசியா லென்னா கையில் துப்பாக்கி உடன் ரஷ்யாவிற்கு எதிரான போரில் கலந்துகொள்வதாக சில புகைப்படங்கள் இந்திய ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?  

பிப்ரவரி 22-ம தேதி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனஸ்டாசியா லென்னா, standwithukraine எனும் ஹாஸ்டாக் உடன் கையில் துப்பாக்கி உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

Instagram link 

அனஸ்டாசியா கையில் வைத்திருக்கும் துப்பாக்கி ஏர்சாஃப்ட் எனும் ராணுவ உருவகப்படுத்துதல் விளையாட்டைச் சேர்ந்தது. ராணுவ சண்டைகளை போன்ற போலியான போரை விளையாடும் போது, உண்மையான ஆயுதங்களை போன்ற பிரதிகள் பயன்படுத்தப்படும். அந்த மாதரியான துப்பாக்கியே அவரது கையில் உள்ளது. தன் புகைப்படம் தவறாக வைரலான காரணத்தினால் அனஸ்டாசியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்து உள்ளார்.

Instagram link 

” நான் இராணுவத்தில் இல்லை, ஒரு பெண், சாதாரண மனிதர், என் நாட்டிலுள்ள எல்லா மக்களையும் போலவே ஒரு நபர். நான் பல ஆண்டுகளாக ஏர்சாஃப்ட் ப்ளேயராக இருக்கிறேன்.  ஏர்சாஃப்ட் என்றால் என்ன என்பதை நீங்கள் கூகுள் செய்து பார்க்கலாம்” எனப் பதிவிட்டு இருக்கிறார்.

முடிவு : 

நம் தேடலில், உக்ரைன் மிஸ் கிராண்ட் பட்டம் வென்ற அனஸ்டாசியா லென்னா கையில் துப்பாக்கி உடன் போரில் கலந்து கொள்வதாக பரவும் தகவல் தவறானது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உக்ரைன் உடன் துணைநிற்போம் என அவர் ஏர்சாஃப்ட் துப்பாக்கி உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டது ஊடகங்களில் தவறான செய்தியாக வெளியாகி பரவி உள்ளது.

Please complete the required fields.
Back to top button
loader