This article is from Sep 29, 2019

“மிஸ்டர் பீன்” விமானத்தை இயக்கி பயணிகளின் உயிரைக் காப்பாற்றினாரா ?

பரவிய செய்தி

ஒருமுறை மிஸ்டே பீன் கென்யாவிற்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென விமானி சுயநினைவை இழந்து விட்டார். உடனே அவர் விமானியின் இருக்கையில் அமர்ந்து & விமானிக்கு மீண்டும் சுயநினைவு வரும் வரை விமானத்தை இயக்கியுள்ளார். தன் மனைவி இரு குழந்தைகள் மற்றும் பயணிகளின் உயிரைக் காப்பற்றியுள்ளார். அவரால் எதையும் செய்ய முடியும்.

மதிப்பீடு

விளக்கம்

னக்கென்ற ஒரு தனித்துவ நடிப்பாலும், நகைச்சுவையான நாடகத்தினாலும் உலக மக்களை சிரிக்க வைத்த மிஸ்டர் பீன் புகழ் ரோவன் அட்கின்ஸனை அறிந்து இருப்பீர். ரோவன் அட்கின்ஸன் என்ற பெயரை கூறுவதை விட மிஸ்டர் பீன் என்ற கதாபாத்திர பெயரை கூறினாலே அனைவரும் நன்கு அறிவர்.

தன் நடிப்பில் நகைச்சுவையான குணத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த புகைப்படங்கள், செய்திகள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதில், மிஸ்டர் பீன் பயணித்த விமானத்தை இயக்கிய விமானி சுயநினைவை இழக்கவே விமானத்தை கட்டுப்பாட்டில் வைக்க மிஸ்டர் பீன் விமானத்தை இயக்கியதாக ஓர் கதை கூறுவதுண்டு.

மிஸ்டர் பீன் விமானத்தை இயக்கியதாக கூறும் மீம் பதிவு ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் ஷேர்களை பெற்று வைரலாகி இருக்கிறது. அந்த பதிவின் கமெண்டில், சித்தரித்த கதை, உண்மை இல்லை, விமானம் என்றால் உதவிக்கு மூன்றாவது விமானி இருப்பார் அல்லவா என்பது போன்ற கேள்விகளை முன்வைத்தனர். மிஸ்டர் பீன் செய்தி குறித்து உண்மையை அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம்.

உண்மை என்ன ?

2001-ம் ஆண்டு மார்ச் மாதம் பிபிசி ஆங்கில செய்தியில் ” Atkinson ‘averted air disaster’ ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில்,

” 46 வயதான ரோவன் அட்கின்ஸன், தன் மனைவி சுனித்ரா, குழந்தைகள் பென்(8), லில்லி(6) என குடும்பத்துடன் விடுமுறைக்காக கென்யாவிற்கு 45 நிமிடம் விமானத்தில் செல்ல திட்டமிட்டு இருந்தனர். Cessna 202 என்ற தனி விமானத்தில் உகுந்து விமான ஓடுதளத்தில் இருந்து நைரோபிஸ் வில்லியம் விமான நிலையத்திற்கு பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது விமானியின் கட்டுப்பாடு நிலைகுலைந்து உள்ளது. விமானியை சுயநினைவிற்கு கொண்டு வர முயற்சி உள்ளனர். இறுதியில் வேறு வழியின்றி விமானத்தை இயக்குவது குறித்து அறியாத அட்கின்ஸன் விமானத்தை இயக்கி உள்ளார்.

அட்கின்ஸன் விமானியை அறைந்த பிறகே சுயநினைவிற்கு வந்துள்ளார். அதன் பிறகு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி விட்டனர். அங்கிருந்து இங்கிலாந்திற்கு வேறொரு விமானத்தின் மூலம் குடும்பத்தினர் திரும்பியுள்ளனர் ” என Spectator magazine’s இணையதளத்தில் வெளியாகி இருப்பதாக பிபிசியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவே நகைச்சுவை நடிகரும், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரான ரோவன் அட்கின்ஸன் விமானத்தை இயக்கிய சம்பவத்தின் உண்மை.

முடிவு : 

நமக்கு கிடைத்த ஆதாரத்தின் படி, மிஸ்டர் பீன் என்ற ரோவன் அட்கின்ஸன் தன் குடும்பத்தினருடன் கென்யா சென்ற பொழுது விமானி சுயநினைவை இழந்து மிஸ்டர் பீன் விமானத்தை இயக்கினார் என 2001-ல் செய்தி வெளியாகி இருக்கிறது.

எனினும், அவர்கள் சென்றது தனி விமானம். பிற பயணிகள் உடன் இல்லை. மிஸ்டர் பீன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மட்டுமே சென்றுள்ளனர். இதற்கு முன்பாக, மிஸ்டர் பீன் இறந்து விட்டதாக தொடர்ச்சியாக ஆண்டுதோறும் வதந்திகள் பரவி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader