கிறிஸ்தவர்கள் போல் நேர்மையானவர்கள் இல்லை என மு.க.ஸ்டாலின் கூறியதாக போலி ட்வீட் !

பரவிய செய்தி
ஒரு கிறிஸ்தவ பாதிரியார் தவறு செய்தார் என்பதற்காக அனைத்து கிறிஸ்தவ மக்களையும் தவறாக நினைப்பது சரியில்லை கிறிஸ்தவர்கள் போல நேர்மையான மக்களை நான் இந்துக்களில் பார்த்தது இல்லை இந்து சாமியார்கள் அனைவரும் திருடர்கள்.
மதிப்பீடு
விளக்கம்
கிறிஸ்தவர்களை போல நேர்மையானவர்களை இந்துக்களில் பார்த்தது இல்லை, இந்து சாமியார்கள் அனைவரும் திருடர்கள் என திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியதாக ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்றினை முத்து கிருஷ்ணன் என்பவர் ஆர்.எஸ்.எஸ் தமிழ்நாடு எனும் முகநூல் குழுவில் பகிர்ந்து இருந்தார். இந்த பதிவு நூற்றுக்கணக்கான ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.
அந்த ஸ்க்ரீன்ஷார்ட் பதிவில் இருக்கும் வாசகத்தைக் கொண்டு தேடிய போது 2018 டிசம்பர் 19-ம் தேடி ரவிச்சந்திரா கே எனும் முகநூல் பக்கத்தில் வெளியான பதிவு கிடைத்தது. அந்த பதிவில் உள்ள ட்விட்டர் ஸ்க்ரீன்ஷார்ட் 2018 ஜூன் 29 எனத் தேதிக் குறிப்பிடப்பட்டுள்து. அந்த ட்வீட் ஸ்க்ரீன்ஷார்ட்டில் “ மக்கள்ளை” மற்றும் “சமியார்கள்” என எழுத்து பிழைகள் இருப்பதை காணலாம்.
ஸ்டாலின் 2018 ட்வீட் என்கிற கீ வார்த்தைகளை பயன்படுத்தி தேடிய பொழுது 2019 டிசம்பர் 29-ம் தேதி டெக்கான் குரோனிக்கல் செய்தியில், திமுக ஸ்டாலின் பெயரில் போலியான ட்வீட்கள் பரவி வருவதாகவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி திமுக சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக வெளியாகி இருக்கிறது. அதில், தற்போது பரவி வரும் ட்வீட் ஸ்க்ரீன்ஷார்ட் இடம்பெற்று உள்ளது.
மேலும், ” கோவில்களுக்கு செல்லும் யாரும் திமுகவிற்கு வாக்களிக்க தேவையில்லை ; அப்படி கோவிலுக்கு செல்வோர்கள் வாக்களித்து தான் வெற்றி பெற வேண்டும் என்றால் அப்படிபட்ட வெற்றி தேவையில்லை ” என ஸ்டாலின் கூறியதாக போலியான ட்வீட் பரவியதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு :
நமது தேடலில், ஒரு கிறிஸ்தவ பாதிரியார் தவறு செய்தார் என்பதற்காக அனைத்து கிறிஸ்தவ மக்களையும் தவறாக நினைப்பது சரியில்லை கிறிஸ்தவர்கள் போல நேர்மையான மக்களை நான் இந்துக்களில் பார்த்தது இல்லை இந்து சாமியார்கள் அனைவரும் திருடர்கள் என ஸ்டாலின் கூறியதாக பரவும் ட்வீட் போலியானது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.