மு.க ஸ்டாலின் இந்துக்களை எதிர்க்கிறாரா என போலிக் கருத்துக்கணிப்பு !

பரவிய செய்தி
மு.க.ஸ்டாலின் இந்துக்களை எதிர்கிறாரா ? தந்தி டிவிக் கருத்துக்கணிப்பில் 68% ஆம் என பதில்.
மதிப்பீடு
விளக்கம்
தொலைக்காட்சி ஊடகங்களில் பல்வேறு விசயங்களுக்கு கருத்துக்கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம். தற்போதும் கூட விவாத நிகழ்ச்சிகளுக்கு ஊடாக தலைப்பிற்கு ஏற்ப மக்களின் கருத்துக்களை முடிவுகளாக வெளியிட்டு வருகின்றனர். அப்படி தந்திடிவி தொலைக்காட்சியில் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்துக்களை எதிர்க்கிறாரா என நடத்திய கருத்துக்கணிப்பில் 68 சதவீதம் பேர் ” ஆம் ” என பதில் கூறியுள்ளதாக இந்த நியூஸ் டெம்பிளேட் ட்விட்டர், முகநூல் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
” இந்துக்களை எதிர்கிறாரா ஸ்டாலின் ? ” என்கிற கருத்துக்கணிப்பை தந்தி டிவி நடத்தியதாக போலியான நியூஸ் டெம்பிளேடை பரப்பி வருகிறார்கள் என்பதை அதை நன்றாக உற்றுப்பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். பழைய டெம்பிளேட், எழுத்துப்பிழை, எழுத்து வடிவில் மாற்றங்கள் என பல குளறுபடிகள் இருப்பதை பார்க்கலாம்.
இதுபோன்றக் கருத்துக்கணிப்பை தந்திடிவி நடத்தியதா எனத் தேடுகையில் எந்தவொரு தகவலும் இல்லை. மேலும், தந்திடிவியின் முகநூல் பக்கத்தை ஆராய்ந்து பார்த்த போது கடந்த 2019 நவம்பர் மாதமே தங்களின் பெயரில் போலியான கருத்துக்கணிப்பு பரவி வருவதாக பதிவிடப்பட்டு உள்ளதை காண முடிந்தது.
வைரலாகும் போலியான கருத்துக்கணிப்பிற்கு கடந்த ஆண்டிலேயே தந்திடிவி மறுப்பு தெரிவித்து பதிவிட்டு இருக்கிறது. ஆனால், அதையே தற்போது வரை தவறாக பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், மு.க.ஸ்டாலின் இந்துக்களை எதிர்க்கிறாரா என தந்திடிவி கருத்துக்கணிப்பு நடத்தியது என பரவி வரும் நியூஸ் டெம்பிளேட் போலியானது என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.