மு.க.ஸ்டாலினுக்காக 2.5 கோடியில் துபாயில் இருந்து கொண்டு வரப்பட்ட கேக் என வதந்தி !

பரவிய செய்தி

ஸ்டாலினால் ஆர்டர் செய்யப்பட்டு துபாயில் செய்யப்பட்டு தனி விமானத்தில் கொண்டு வரப்பட்டது. இதன் விலை 2.5 கோடி ரூபாய். தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஸ்டாலின் வீட்டில் வெட்டப்பட்டது இந்தக் கேக்.

மதிப்பீடு

விளக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்றதைக் கொண்டாடும் வகையில் உலகப் புகழ்பெற்ற துபாயின் Debbie Wingham நிறுவனத்தால் 2.5 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட இந்த கேக்கை தனி விமானத்தில் கொண்டு வந்ததாக தலைமைச் செயலகம் வடிவிலான கேக் அருகே துர்கா ஸ்டாலின் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Advertisement

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் கேக் குறித்து தேடுகையில், தலைமைச் செயலகம் வடிவிலான கேக் தயாரிக்கப்பட்டது துபாயில் இல்லை, சென்னையில் உள்ள Cake Square எனும் கேக் விற்பனை கடையில் என்பதை அறிய முடிந்தது.

Facebook link | Archive link

தேர்தல் முடிவுக்கு அடுத்த நாளான மே 3-ம் தேதி, இதே கேக் புகைப்படத்துடன் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறி Cake Square முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டு உள்ளது. கடந்த ஓரிரு நாட்களாக இந்த கேக் புகைப்படம் துபாயில் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவியது குறித்தும் Cake Square முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Advertisement

Facebook link | Archive link  

இது தொடர்பாக Cake Square-க்கு தொடர்பு கொண்டு பேசிய போது, ” தலைமைச் செயலகம் வடிவில் செய்யப்பட்ட கேக்கை சமூக வலைதளங்களில் தவறான பரப்பி வருகின்றனர். இந்த கேக் சென்னை கிண்டியில் உள்ள Cake Square கடையில் தான் செய்யப்பட்டது. இதன் விலை 30,000 ரூபாய் ” எனத் தெரிவித்து இருந்தனர். எனினும், ஆர்டர் கொடுத்தவரின் விவரத்தை வழங்க மறுத்து விட்டனர்.

தலைமைச் செயலகம் வடிவிலான கேக்கை வழங்கியது திமுகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் மாலதி எனக் கூறப்படுகிறது.

Twitter link | Archive link

இது குறித்து மருத்துவர் மாலதியின் ட்விட்டர் பக்கத்தை அறிக்கையில், துர்கா ஸ்டாலின் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் கேக்கின் புகைப்படத்துடன் மே 3-ம் தேதி ட்வீட் செய்து இருக்கிறார்.

முடிவு :

நம் தேடலில், தேர்தல் வெற்றிக்காக மு.க.ஸ்டாலினால் ஆர்டர் செய்யப்பட்டு 2.5 கோடி ரூபாய் மதிப்பில் துபாயில் செய்யப்பட்டு தனி விமானத்தில் கொண்டு வரப்பட்ட தலைமைச் செயலகம் வடிவிலான கேக் என பரப்பப்படும் தகவல் தவறானது.

இந்த கேக் சென்னையில் உள்ள Cake Square-ல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 30,000 ரூபாய். இதை வழங்கியது திமுகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் மாலதி என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button