முதல்வரின் கூலிங் ஜாக்கெட் 17 கோடி என பாஜகவினர் பரப்பும் போலிச் செய்தி.. பி.டி.ஆர் போட்ட ட்வீட் !

பரவிய செய்தி

கூலிங் ஜாக்கெட் 17 கோடி. துபாய் செல்லும் போது முதல்வர் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி என நிதியமைச்சர் PTR தகவல் !

மதிப்பீடு

விளக்கம்

துபாய் செல்லும் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்ததாக நியூஸ் 7 தமிழ் உடைய நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

நியூஸ் 7 தமிழ் சேனல் பெயரில் முதல்வர் குறித்து பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது. இந்த போலியான நியூஸ் கார்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் ட்விட்டர் பதில் அருள் என்பவர் கமென்ட் செய்து இருக்கிறார்.

Tweet link  

அதற்கு பி.டி.ஆர், ” TN காவல்துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பிப்பாக இருக்கலாம். வடிகட்டப்பட்ட முட்டாள் இது போன்ற முட்டாள்தனத்தை வெளிப்படையாக இடுகையிடுவதால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை ” என அந்த பதிவையும் இணைத்து பதிவிட்டு இருக்கிறார்.

பரப்பப்படும் போலிச் செய்திக் குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர் ட்விட்டரில் பதிவிட்டதால், பலரும் அதைப் பகிர்ந்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் ஊடகங்களின் பெயரில் போலிச் செய்திகளை உருவாக்கி பரப்புவது தமிழகத்தில் அதிகரித்து வருவதை பலமுறை நாம் குறிப்பிட்டு உள்ளோம். போலிச் செய்திகளை பதிவிட்டு சட்ட நடவடிக்கைகளுக்குள் சிக்க வேண்டாம்.

முடிவு : 

நம் தேடலில், துபாய் செல்லும் போது முதல்வர் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி என நிதியமைச்சர் தகவல் எனப் பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader