மு.க.ஸ்டாலின் நிதியுதவிக்காக மட்டும் மத்திய அரசு என அழைத்தாரா ?

பரவிய செய்தி

அது என்ன பணம் வாங்க மட்டும் மத்திய அரசு !! பழி போடும்போது மட்டும் ஒன்றிய அரசு ??

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என அழைத்தார். இதற்கு, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆகையால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் ஒன்றிய அரசு என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், நெடுஞ்சாலை திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசு என்பதற்கு பதிலாக மத்திய அரசு எனக் கூறியுள்ளதாகவும், நிதியுதவிக்காக மட்டும் மத்திய அரசு எனக் கூறுவதாக செய்தித்தாள் பக்கம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Archive link 

Advertisement

உண்மை என்ன ? 

Twitter link  

முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் குறித்து தேடுகையில், பிரதமர் மோடிக்கு நெடுஞ்சாலைத் திட்டம் குறித்து கடிதம் எழுதிய செய்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில், ” ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் ” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என அழைத்த போதும் சில ஊடக செய்திகளில் வழக்கம் போல் மத்திய அரசு என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகையால், தற்போது முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் ஆங்கிலத்தில் Union Government எனக் குறிப்பிட்டதை செய்தி நிறுவனங்கள் மத்திய அரசு என்று எழுதி உள்ளனர்.

முடிவு : 

நம் தேடலில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவிக்காக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசிற்கு பதிலாக மத்திய அரசு எனக் கூறியதாக பரப்பப்படும் தகவல் தவறானது. செய்தி நிறுவனமே மத்திய அரசு எனக் குறிப்பிட்டு உள்ளனர் என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button