மு.க.ஸ்டாலின் நெசவு செய்யும் இடத்தில் ஜெயலலிதா புகைப்படம் இருப்பதாக ஃபோட்டோஷாப் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைத்தறி நெசவு செய்து பார்க்கும் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் சுவற்றில் இருப்பதாக வட்டமிட்டு இப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
உண்மை என்ன ?
மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019ம் ஆண்டு மே 6-ம் தேதி dtnext இணையதளத்தில் ஸ்டாலின் கைத்தறி நெசவு செய்யும் இப்புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் ஜெயலலிதாவின் புகைப்படம் சுவற்றில் இல்லை.
அப்புகைப்படத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஃபோட்டோஷாப் மூலம் வைத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : தேவர் சமூகம் பற்றி கே.பி. முனுசாமி, பழனிச்சாமி கூறியதாக பரவும் போலி செய்திகள் !
தமிழக தேர்தல் தொடங்க இருக்கையில் அரசியல் சார்ந்த ஃபோட்டோஷாப் செய்திகள் பல சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்பட்டு வருகின்றன. ஆகையால், கிண்டல் அல்லது வெறுப்பை ஏற்படுத்தும் பதிவுகளின் உண்மைத்தன்மையை அறிந்து பகிரவும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.