தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் வேண்டும் – எம்எல்ஏ தனியரசு

பரவிய செய்தி
தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகின்றனர் – எம்.எல்.ஏ தனியரசு.
மதிப்பீடு
விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் பொழுது காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ தனியரசு பேசத் துவங்கினார். அப்போழுது, மாலை நேரத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரே ஒரு பாட்டில் வாங்குவது கூட மிக கஷ்டமாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், அந்த காலத்தில் புதுப்படங்களுக்கு டிக்கெட் வாங்குவது போன்று மாலை நேரத்தில் ஒரு பாட்டில் வாங்க நெடுநேரம் ஆகிறது. கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆகையால், தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு மாட்டிறைச்சி விவகாரத்தில் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எம்.எல்.ஏ தனியரசு தமிழக அரசின் முன் வைத்துள்ளார்.
தமிழகத்தில் மது பழக்கம் அதிகரித்து வருவதை எதிர்த்து டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என ஒருபுறம் மக்கள் போராடிக் கொண்டிருக்கையில், எம்.எல்.ஏ தனியரசு உடைய நடமாடும் டாஸ்மாக் கடைகள் கோரிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தனியரசு உடைய கோரிக்கைக்கு சமூக வலைதளங்களில் கண்டங்கள் எழுகின்றன.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.