முத்துராமலிங்கத் தேவரால் சர்ச்சை ஏற்படும் என டி.ஆர்.பி.ராஜா கூறியதாகப் போலிச் செய்தி !

பரவிய செய்தி
முத்துராமலிங்கத்தேவரால் சர்ச்சை ஏற்படும்… முத்துராமலிங்கத்தேவர் சிலையை வைத்தால் பிற சமூகங்களில் சர்ச்சை ஏற்படும். வேலுநாச்சியார் தனிஆளாக அந்நியர்களை எதிர்த்து போரிட்டார். எனவே வேலுநாச்சியார் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல முடிவு செய்தோம்- திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா
மதிப்பீடு
விளக்கம்
மன்னார்குடி எம்எல்ஏவும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராகவும் உள்ள டி.ஆர்.பி.ராஜா, முத்துராமலிங்கத் தேவர் சிலையை வைத்தால் சர்ச்சை ஏற்படும் என்பதால் வேலுநாச்சியார் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல முடிவு செய்தோம் எனக் கூறியதாக நியூஸ் 7 தமிழ் உடைய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
@TRBRajaa ஏன்டா கடைசி மக்கள் சேர்ந்திடக்கூடாதுனு தெளிவா இருக்கிங்கல்ல… என்னடா லாஜிக் இதெல்லாம்… என்ன மயிர புடுங்கினானு அந்த ராமசாமி நாயிக்கு அத்தன சிலை வைச்சிருக்கிங்க… pic.twitter.com/HGFKHmUF05
— Suresh (@SURESHTHEVAR24) January 19, 2022
உண்மை என்ன ?
திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, முத்துராமலிங்கத் தேவர் மற்றும் வேலுநாச்சியார் குறித்து கருத்து தெரிவித்தாரா எனத் தேடுகையில், அவரின் சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களோ அல்லது செய்தியோ வெளியாகவில்லை.
நியூஸ் 7 தமிழ் உடைய முகநூல் பக்கத்தில் உள்ள நியூஸ் கார்டுகளை ஆராய்கையில், டி.ஆர்.பி.ராஜா இப்படியொரு கருத்தைக் கூறியதாக ஜனவரி 19-ம் தேதி எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.
பரப்பப்படும் நியூஸ் கார்டில் நியூஸ் 7 தமிழ் உடைய வாட்டர்மார்க் கூட இடம்பெறவில்லை. நியூஸ் 7 தமிழ் உடைய நியூஸ் கார்டில் போலியான செய்தியை உருவாக்கி இருக்கிறார்கள் எனத் தெளிவாய் அறிய முடிகிறது.
இதுகுறித்து, நியூஸ் 7 தமிழ் உடைய இணையதளப் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசுகையில், இதை நாங்கள் வெளியிடவில்லை. போலியானது ” எனத் தெரிவித்து இருந்தனர்.
மேலும் படிக்க : பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் அமைச்சர் சக்கரபாணி கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !
இதேபோல், பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் அமைச்சர் சக்கரபாணி, ” மக்களுக்கு நன்றியே இல்லை ” எனக் கூறியதாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வைரல் செய்யப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், முத்துராமலிங்கத்தேவரால் சர்ச்சை ஏற்படும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாக பரப்பப்படும் நியூஸ் 7 தமிழ் உடைய நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.