முஸ்லீம் ஓட்டுக்காக மோடியும், அமித்ஷாவும் குல்லா அணிந்ததாக ஃபோட்டோஷாப் வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
மேற்கு வங்க மாநில தேர்தலில் முஸ்லீம்கள் வாக்குகளை பெற பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முஸ்லீம்கள் அணியும் குல்லாவை அணிந்ததாக இப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். வாசகர் தரப்பிலும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து கேட்கப்பட்டு வருகிறது.
மோடி, அமித்ஷாவின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019 டிசம்பர் 20-ம் தேதி ” In thrall to its own violence ” எனும் தலைப்பில் வெளியான தி ஹிந்து ஆங்கில செய்தியில் குல்லா அணியாத உண்மையான புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
மேற்கொண்டு தேடுகையில், 2019 ஆகஸ்ட் 27-ம் தேதி மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் புகைப்பட தொகுப்பு ஆனது நியூஸ் 18 இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
அருண் ஜெட்லியின் வீட்டில் இருந்து மோடியும், அமித்ஷாவும் வெளியே வரும் புகைப்படத்தை சிறிதாக்கி ஃபோட்டோஷாப் மூலம் குல்லா வைத்து தவறாக பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : மம்தா பானர்ஜி காலில் கட்டு இடம் மாறியதா, எழுந்து நடந்தாரா ?
முடிவு :
நம் தேடலில், மேற்கு வங்க தேர்தலில் முஸ்லீம்கள் வாக்குகளை பெற மோடியும், அமித்ஷாவும் குல்லா அணிந்து வேடம் போடுவதாக வைரல் செய்யப்படும் புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டவை என அறிய முடிகிறது.