மோடி பிறந்தநாளன்று பாஜக வெளியிட்ட சாதனை வீடியோவில் லாஸ் ஏஞ்சலஸ் காட்சி !

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளன்று பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ” மோடி அரசின் சாதனைகளை பட்டியலிட்டும், பாராட்டியும் ” 2.42 நிமிட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு தலைப்பின் கீழ் மோடி அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை என பட்டியலிட்டுக் கொண்டே போகும் போது 2.24 வது நிமிடத்தில் “21-ம் நூற்றாண்டை வழிநடத்தும் இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை மாற்றியமைத்ததற்காக” பாராட்டும் தலைப்பில் ஒரு நகர கட்டிடங்கள் மின்னும் காட்சி இடம்பெற்றது.

அந்த நகர கட்டிடங்கள் எங்கு எடுக்கப்பட்டது எனக் குறிப்பிடவில்லை. எனினும், பிரதமர் மோடியின் திட்டங்கள் மற்றும் சாதனை வீடியோவில் இடம்பெற்றதால் இந்தியாவைச் சேர்ந்தது என்றே பார்ப்பவர்களை நினைக்கத் தோன்றும். ஆனால், அந்த காட்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் எடுக்கப்பட்டது.

2011-ம் ஆண்டில் “The Angels” A los Angeles Timelapse by Matthew Givot ” எனும் தலைப்பில் வெளியான வீடியோவில் 3.55வது நிமிடத்தில் இருந்து இடம்பெற்ற கட்டிடங்களின் காட்சி பாஜக வெளியிட்ட வீடியோவில் இருக்கும் கட்டிடங்களுடன் ஒத்துப் போவதை பார்க்க முடிகிறது.

இதில், ஆச்சரியம் என்னவென்றால் 2017-ல் பாகிஸ்தானைச் சேர்ந்த skyled எனும் பல்பு நிறுவனம் இதே வீடியோ காட்சியை விளம்பரத்தில் பயன்படுத்தி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளன்று பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் இடம்பெற்ற நகர கட்டிடங்களின் காட்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியைச் சேர்ந்தது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button