மம்தா பெனர்ஜிக்கு கூடிய கூட்டத்தை மோடிக்கு என வதந்தி !

பரவிய செய்தி
வங்கதேசத்தில் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் ஒரு பகுதி.
மதிப்பீடு
சுருக்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய பிரச்சாரத்தின் போது கூடிய கூட்டத்தின் புகைப்படமே இது.
விளக்கம்
முகநூலில் நாம் பார்க்கும் பெரும்பாலான புகைப்படமும், அதில் பதிவிடும் தகவலும் பொருந்தாதவையே. அவ்வாறான பதிவு ஒன்றே பிஜேபிக்கு ஆதரவாக பதிவிட்டு உள்ளனர்.
வங்க தேசத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தின் புகைப்படம் என பதிவிடப்பட்டது தவறானவையே. அங்கு கூடியிருக்கும் மக்கள் அம்மாநிலத்தின் ஆளும் அரசான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பேரணிக்கு கூடியவர்கள்.
“ 2014 பிப்ரவரி மாதம் கொல்கத்தாவில் உள்ள brigade parade மைதானத்தில் மம்தா பெனர்ஜி நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கூடிய மக்கள் என அன்றைய செய்திகளில் வெளியாகி இருக்கிறது “.
ஜனவரி 19-ல் மேற்கு வங்க மாநிலத்தில் 2019 தேர்தல் களத்திற்காக எதிர் அணியில் இருப்பவர்கள் கலந்து கொள்ளும் பேரணிக்கு முன்னாள் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள், எதிர்க் கட்சி தலைவர்கள் வருகைத் தந்தனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பெனர்ஜி ஒருங்கிணைத்த இந்த பேரணி brigade parade மைதானத்தில் அரங்கேறியது. இந்த பேரணிக் குறித்த தகவல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இப்படமும் இடம்பெற்றுள்ளது. கீழே, புகைப்படம் Brigade rally 2014 எனக் குறிப்பிட்டுள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக கூடிய கூட்டத்தை மோடியைக் காண வந்த கூட்டம் என தவறாக பதிவிட்டு வருகின்றனர்.