இளம் வயதில் நரேந்திர மோடி வீட்டை விட்டு விரட்டப்பட்டதாக பரவும் வதந்தி !

பரவிய செய்தி

மோடி சந்நியாசம் பெற்று வீட்டை விட்டு வெளியேறவில்லை. நகையை திருடியதால் வீட்டை விட்டு துரத்தியடித்தோம் – பிரஹலாத் மோடி ( நரேந்திர மோடியின் சகோதரர்).

மதிப்பீடு

விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய 18 ஆவது வயதில் ஆன்மீகத்தால் வீட்டை விட்டு வெளியேறி மூன்று ஆண்டுகள் இமயமலையில் தங்கியதாக கூறுவதுண்டு. ஆனால், மோடி ஆன்மீகத்தால் வீட்டை விட்டு வெளியேறவில்லை, வீட்டில் இருந்து நகையை திருடியதால் விரட்டியடிக்கப்பட்டார் என அவரின் சகோதரர் பிரஹலாத் மோடி பேட்டி ஒன்றில் கூறியதாக சமூக வலைத்தளத்தில் பரவின.

Advertisement

இத்தகைய கருத்தை மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி அமர் உஜாலா என்ற செய்தி அளித்த பேட்டியில் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவின. தமிழகத்தில் பரவியதை போன்று வட இந்தியாவில் பெரிய வைரல் ஆகி இருந்தன.

ஆனால், 2016 ஆம் ஆண்டிலேயே பிரஹலாத் மோடி அளித்த பேட்டி என பரவியதை வதந்தி என இணைய செய்திகளில் வெளியாகின. மோடியின் சகோதரரும் அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். அப்படியொரு பேட்டியே அளிக்கவில்லை என கூறினார். இது மூன்று ஆண்டுகள் பழைய வதந்தியே !

அமர் உஜாலா என்று இணைய பக்கத்தின் பெயரில் பரவியதற்கு அவர்களே மறுப்பு தெரிவித்து இருந்தனர். அவ்வாறான, செய்திகளை தாங்கள் வெளியிடவில்லை என மறுப்பு செய்தியை 2016 ஜூன் 2-ம் பதிவிட்டனர்.

Advertisement
Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button