This article is from Dec 09, 2018

மோடி ஆட்சியில் இந்தியா வளர்ச்சி என்பது உண்மையா? உதாரா?

மதிப்பீடு

சமீபத்தில் 5 மாநில தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடைப்பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய பிரதமர் மோடியின் ஆட்சியில் நாடு கண்ட வளர்ச்சிகள் என சமூக வலைத்தளங்களில் மீம்கள், வீடியோக்கள், பதிவுகள் என அனல் பறக்கிறது.

 இந்தியாவில் எப்போதும் இல்லாத வேகமான வளர்ச்சி மோடி அரசாங்கத்தின் கீழ் என கீழ்க்கண்ட பட்டியலை வெளியிட்டு உள்ளனர். இதில், எது எது உண்மை, எவையெல்லாம் போலியாக கூறப்பட்டவை என்பதை காணலாம்.

கிராமப்புற சுகாதாரம் :

இந்தியாவில் கிராமப்புற சுகாதாரம் இந்திய கிராமப்புற சுகாதாரம் 2014-ஆம் ஆண்டு இருந்த 39 சதவீதத்திலிருந்து 76 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஜனவரி 2018 இல் வெளிவந்த  ECONOMIC SURVEY 2017-2018 கூறுகிறது.

ஆனால் மீம் பதிவில் 95% கிராமப்புற சுகாதாரம் உயர்ந்துள்ளது என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. WHO, ஐ.நா போன்றவையின் சமீபத்திய ஆய்வில் இந்தியாவில் கழிப்பறை, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட சுகாதார வசதிகள் குறைவாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஸ் இணைப்பு :

இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் வீடுகளில் கேஸ் இணைப்பு 55% இல் இருந்து 90% ஆக உயர்ந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 2015-ல் 50% ஆக இருந்த கேஸ் இணைப்பு 2018 தொடக்கத்தில் 79.2 சதவீதமாக உயர்ந்து உள்ளது. கேஸ் இணைப்பு தற்போது அதிகரித்து உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். 90% என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. இந்தியாவில் அதிகப்படியான கேஸ் இணைப்பு தென் மாநிலங்களில் (94%) பெறப்பட்டுள்ளன.

கிராமப்புற சாலைகள் :

91% அளவிற்கு கிராமப்புறங்களில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது எனப் பதிவில் கூறப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும்(474நாட்கள்) சாலை அமைக்க தேவைப்படும் நாட்களின் எண்ணிக்கையானது மூன்று ஆண்டுகளில்(2014-2017) பிஜேபி ஆட்சியில் 124 ஆக குறைந்து உள்ளது என செய்தியில் வெளியாகி உள்ளது. இருப்பினும், 2017-ல் ஊரக சாலை அமைக்கும் பணிகளின் வேகம் குறைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், இலக்கானது முழுவதும் நிறைவடையவில்லை என குறிப்பிட்டுள்ளனர். நெடுஞ்சாலை பணிகளும் நிறைவடையாமல் உள்ளன. பல ஆண்டுகளாக நடைபெற்ற சாலை பணிகளை கூட சில மாதங்களில் முடிந்தவை என அக்கட்சி ஆதரவாளர்கள் ஓர் வதந்தியைப் பரப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான கிராமப்புறங்களில் சாலை வசதிகள் இல்லை என்பதே உண்மை.

வங்கி கணக்குகள் :

இந்திய கிராமப்புற சுகாதாரம் 2014-ஆம் ஆண்டு இருந்த 39 சதவீதத்திலிருந்து 76 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஜனவரி 2018 இல் வெளிவந்த ECONOMIC SURVEY 2017-2018 கூறுகிறது. இதை 2017-இல் பாஜக அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் 21.22 வீடுகளில் 99.9% சதவீதம் வாங்கி கணக்கு இரு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2011 சென்சஸ் கணக்கின் படி 24.67 கோடி வீடுகள் இருந்தன. ஏறக்குறைய 3.5 கோடி வீடுகளை கணக்கிலேயே எடுக்காமல் விட்டு விட்டனர். அதுமட்டுமில்லாமல் 2011-க்கு பிறகும் வீடுகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் . எனவே 99.9% என்பது உண்மை அல்ல.

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளுக்கு வங்கி கணக்குகள் கிடைத்ததாகக் கூறியுள்ளனர். ஆனால், 2018 ஏப்ரலில் உலக வங்கி வெளியிட்ட Global index database-ல் உலகில் வங்கி கணக்கு இல்லாத வயது வந்தவர்களில் 11 சதவீதம் இந்தியாவில் உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் இணைப்பு :

இந்திய கிராமங்களுக்கு 100% மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி ஏப்ரல் 2018-ல் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். 95% வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் 31 மில்லியன் மக்கள் இருளில் தான் வாழ்கின்றனர் என Forbes பத்திரிகையில் வெளியாகி உள்ளது. கிராமங்களில் வழங்கப்படும் மின் இணைப்புகள் பொது இடங்கள் மற்றும் 10 சதவீத வீடுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 95% வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பது முற்றிலும் தவறான தகவல்.

பைபர் கேபிள் நெட்வொர்க் :

கிராமங்களில் சுகாதாரம், கல்வி, வறுமை தொடர்பாக மக்களுக்கு தேவையான அரசு சேவைகளை வழங்க 2012-ல் பாரத்நெட் தொடங்கப்பட்டது. 2019-க்குள் இந்தியாவில் உள்ள 2,50,000 கிராம பஞ்சாயத்துக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் இணைப்பு வழங்கி அரசு சேவைகளை வழங்க இலக்கு உள்ளது. இந்திய அரசின் பாரத்நெட் திட்டத்தில் 2017 டிசம்பர் வரையில் 1,00,000 கிராம பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

பொது சேவை மையங்கள் :

இந்தியாவில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பொது சேவை மையங்களின் எண்ணிக்கை 2014 மே மாதத்தில் 83,950 ஆகவும், 2017-ல் 2,71,211 ஆக அதிகரித்தும் உள்ளன.

வருமான வரி செலுத்துவோர் :

இந்தியாவில் வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது. 2013-14-ல் கார்பரேட் வரி, தனிநபர் வரி, பிற வரிகள் என நேரடியாக மொத்தம் 6,38,596 கோடியாக இருந்தது. 2017-18-ல் 10,02,741 கோடியாக உயர்ந்து உள்ளது. 2017-18-ல் 99.49 லட்சம் பேர் புதிதாக வருமானவரி செலுத்தி உள்ளனர் என செய்தியில் வெளியாகியது. 2013-14 வருமான வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை 3.79 கோடியாக இருந்தது 2017-18-ல் 6.8 கோடியாக உயர்ந்துள்ளது உண்மை. அதேபோன்று Return fillers எண்ணிக்கை 3.3 ல் இருந்து 5.4 ஆகவும் உயர்ந்துள்ளது.

எனினும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் புதிய வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து சாதனைப் படைத்ததாக ஆட்சியாளர்கள் கூறினர். ஆனால், ஒட்டுமொத்த விகிதத்தை பார்க்கும் பொழுது 2011-12-ல் இருந்தே நேரடி வருமான வரி வளர்ச்சி 2013-14-ல் 14.24% ஆக உயர்ந்தது. அதன்பின் 2016-ல் அதன் வளர்ச்சி 6% ஆக குறைந்து மீண்டும் 2016-17-ல் 14.54 % ஆக உயர்ந்து உள்ளது.

மறைமுக வரி செலுத்துவோர் :

2013-14-ல் கிடைத்த மறைமுக வரி 4,95,347 கோடி, 2017-18-ல் 9,15,256 கோடி வரி வருமானம் கிடைத்துள்ளது. 2013-14-ல் நேரடி மற்றும் மறைமுக வரிகளின் விகித சராசரி 56.32% . ஆனால், 2017-18-ல் நேரடி மற்றும் மறைமுக வரிகளின் விகித சராசரி 52.29% மட்டுமே.

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் சில திட்டங்களில் மாற்றங்கள் அதிகரித்ததையும், சிலவை மிகைப்படுத்தப்பட்ட மற்றும் பொருந்தாத தகவல்கள் என்பதை அறியலாம்.

Open Defecation-Free India by 2019: How Villages are Progressing?

Income Tax Department

Press Information Bureau 

With 99.49 lakh new tax filers, income tax returns surge 26% in 2017-18 

Govt’s optical fibre cable project BharatNet entangled in turf war

National Optical Fibre Network project: Fast internet, slow implementation

Nearly 80% of Indian households now have access to LPG gas

3 years of Modi govt: Rural roads take 124 days to build from UPA’s 474

Modi Announces ‘100% Village Electrification’, But 31 Million Indian Homes Are Still In The Dark

Common Services

19 crore Indian adults don’t have bank account: World Bank

Please complete the required fields.




Back to top button
loader